palmyra7
ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த ஒரு சில ஆண்டுகளாக  ஈராக்கிற்குள் புகுந்து கடும் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் கை ஓங்கியதால் அமெரிக்கா தனது விமானப் படை மூலம் ஈராக் ராணுவத்துக்கு உதவி வருகிறது. என்ற போதிலும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்க முடியவில்லை.
palmyra1
இந்த நிலையில்,கடந்த ஆண்டு, 2015 மே 19ம் தேதி,  ஈராக்கின் முக்கிய மாகாணங்களில் ஒன்றான அன்பாரின் தலைநகரான ரமடியை முற்றுகையிட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள், ராணுவத்தின் மீது அலை அலையாய் திரண்டு வந்து தாக்குதலை தொடுத்து ரமடி நகரை கைப்பற்றினர். தாக்குதலை சமாளிக்க முடியாமல் ராணுவ வீரர்கள் ஓட்டம் பிடித்தனர். அப்போது, சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள், அங்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல்மைரா நகரையும் கைப்பற்றினர். யுனெஸ்கோ அமைப்பினால் பாரம்பரிய சின்னங்களாக பட்டியலிடப்பட்டுள்ள , பழம்பெருமை வாய்ந்த பல கட்டிடங்கள் பல்மைரா நகரில் உள்ளன.
palmyra8
இதனால் அந்தப் பாரம்பரிய சின்னங்கள் தப்புமா என்ற கேள்வி எழுந்தது. அந்த பாரம்பரிய சின்னங்களை அவர்கள் அழித்து விடக்கூடும் என அஞ்சப்பட்டு வந்தது.  அந்த அமைப்பின் பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக அங்கிருந்த பல புராதனமானக் கட்டிடங்களை இடித்துள்ளனர். அவர்கள் அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க, பழங்கால நினைவுத்தூண்களையும், நினைவுச் சின்னங்களையும்  கடந்த சில மாதங்களாக அழித்தொழித்து நாசப்படுத்தி வந்தனர். மிச்சமிருக்கும் கலைப் பொக்கிஷங்களையாவது காப்பாற்றும் என்ணத்தில் சிரிய அரசுக்கு ஆதரவான போராளி குழுக்களுடன் ஒன்றிணைந்து இங்கு ஆட்சி செலுத்திவந்த ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் சிரியா ராணுவத்தினர் தீவிரமாக சண்டையிட்டு வந்தனர்.
palmyra3
palmyra5
ஒரு வருடத்திற்கு  பிறகு , கடந்த சில நாட்களாக ரஷ்ய வான்படைத் தாக்குதல் மற்றும் ஷியா ஆயுததாரிகளின் உதவியுடன் சிரிய இராணுவம் அங்கு நிலப்பகுதிகளை சிறிது சிறிதாக கைப்பற்றி வந்தது. அந்த நகரைக் கைப்பற்றுவதற்காக சனிக்கிழமை இரவு முழுவதும் கடுமையான சண்டை நடந்தது.
palmyra6
இரண்டாயிரம் ஆண்டு பழமையான ரோமப்பேரரசு கால மிச்ச சொச்சங்கள் பல இன்னமும் இடிக்கப்படாமல் இருப்பதை அங்கே காண முடிகிறது. தூண்களும் தோரணவாயில்களும் திறந்தவெளி அரங்கமும் தப்பியிருக்கின்றன. ஆனால் இரண்டு தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளது. எனினும் முழுமையான சேதாரத்தின் அளவு இன்னமும் கணக்கிடப்படவில்லை.
palmyra4
பயங்கரவாதத்துக்கு எதிரான தமது போரில் இந்த நகரை மீட்டிருப்பது முக்கிய சாதனை என சிரியாவின் அதிபர் பஷர் அல் அசாத் தெரிவித்திருக்கிறார்.
பல்வேறு அடிப்படையில், இந்த மீட்பு என்பது சிரிய நாட்டு அரசுக்கு வெற்றியாகவும் ஐ எஸ் அமைப்புக்கு தோல்வியாகவுமே பார்க்கப்படுகிறது.
ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்த போரில் தோல்வியை தழுவ ரஷ்ய ராணுவமும் பெரிதும் துணை நின்றுள்ளது. இந்தப் போரில், குறைந்தப்பட்சம் 400 ஐஎஸ்ஐஎஸ் ஜிஹாதிகள் கொல்லப்பட்டனர்,  மேலும், அரசுத் தரப்பில், 188 துருப்புக்கள் மற்றும் போராளிகள் கொல்லப்பட்டனர் என சிரிய மனித உரிமைகள் ஆணையர் கூறினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐ எஸ்ஐ எஸ் அமைப்பின் மிகப்பெரிய தோல்வி இது என்றும் சிரிய நாட்டின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவிக்கிறது. இங்கிருந்த பொதுமக்களை ஐஎஸ் அமைப்பினர் தம் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு கொண்டு சென்றிருப்பதாக க்கூறப்படுகிறது.
ஐ எஸ் அமைப்பு பிடித்து வைத்திருந்த பல்மைரா நகரின் நவீன பகுதிகள் பேய் நகரம் போல காட்சியளிக்கிறது. வெறிச்சோடிய வீதிகள், இடிக்கப்பட்ட கட்டிடங்கள், அழிக்கப்பட்ட அருங்காட்சியக கலைப்பொருட்கள் என எங்கு திரும்பினாலும் அழிவும் இடிபாடுகளும் காணப்படுகின்றன.
 
எனினும், ஐ.எஸ் தீவிரவாதிகள் பல்மைராவில் உள்ள பட இடங்களில் ஆபத்தான கண்ணி வெடிகுண்டுகளை புதைத்துள்ளனர்.
ரோபோக்கள் அனுப்பும் புடின்:
PALMYRA PUTIN
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், இந்த கண்ணி வெடிகுண்டுகளை கண்டுபிடித்து அப்புறப்படுத்த,   ரோபோக்களை அனுப்ப  தற்போது உத்தரவிட்டுள்ளார். நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட ரோபோக்கள் மட்டுமின்றி உயர் மின் பொறியாளர்களும் விரைவில் சிரியாவுக்கு அனுப்பப்பட உள்ளனர். இந்தத்  தகவலை ரஷ்ய ராணுவத்தின் உயர் அதிகாரிகளில் ஒருவரான வேலரி ஜெராசிமோவ் உறுதிப்படுத்தியுள்ளார்.
சேதத்தை சரிப்படுத்த 5 ஆண்டுகள் தேவை:
பல்மைராவில் ஐ எஸ் ஐ எஸ் ஜிஹாத் குழுவினால் சேதமடைந்த பண்டைய இடிபாடுகளை யுனெஸ்கோ அனுமதி அளித்தால், தொல்பொருள் துறை மீட்க ஐந்து ஆண்டுகள் வேண்டும் என்று சிரியா தொல்பொருட்கள் தலைமை நிர்வாகி மாமுன் அப்துல்கரிம் கூறினார்.