னித நாகரிகமும் தொழிநுற்ப வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும் இந்த காலகட்டத்தில், புதுப்புது வரவாக நோய்களும் அச்சுருத்திக் கொண்டுதான் இருக்கிறது. இருந்தாலும்’ பழங்காலத்தில் நாம் முன்னோர்களை பயமுறுத்தி உயிர்களை குடித்த ஒரு சில நோய் இன்னமும் நம்மை பின் தொடர்வது வேதனையான ஒன்றுதான்!.. `எங்க காலத்துல ஆஸ்பத்திரிக்கே போனதில்லை’ என்று கூறியவர்களைக் கேட்டிருப்போம். ஆனால், இன்றைய சூழ்நிலையில் மருத்துவமனைக்குச் செல்லாதவர்கள் யார் என்று கேட்டால், கிடைக்கும் பதில் ?’ தமிழகத்தில் கடந்த வருடம் டெங்கு நோய் பரவி எல்லோர்யிடத்திலும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இந்த பாதிப்புனால் பல உயிர்கள் பலியாகின ஆனால், இதை அப்படியே முடி மறைத்தது நமது அரசாங்கம். இந்த நோய் போலவே, பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் அதிக பயத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மிகக் கொடுமையான  நோய் மலேரியா ஆகும்.

இந்த நோய் மிகவும் பழைமையான, கொடிய நோயாகும். இந்த நோயை முழுமையாக ஒழிக்க முடியவில்லை என்பதே உண்மை.

இந்த மலேரியா நோயைக் கண்டறிந்து அதனைக் கட்டுப்படுத்துவதற்காக, அது தொடர்பான விழிப்பு உணர்வை உலகம் முழுக்க ஏற்படுத்த வேண்டும் என்கிற என்னத்தில் உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25-ம் தேதியை `உலக மலேரியா தினம்’ என அறிவித்தும் அதைக் கடைப்பிடித்தும் வருகிறது.

ஆண்டு தோறும் மக்களுக்குத் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வையில்  ஒரு வசனத்துடன் விழிப்பு உணர்வு பிரச்சாரத்தை தொடர்கிறது. அதுபோன்றே இந்த ஆண்டுக்கான வசனம், `மலேரியாவை முறியடிப்போம்!’

`இந்தியாவில் ஏழுபேரில் ஒருவருக்கு மலேரியா தோற்று உண்டாகிறது’ என்கிறது ஒரு புள்ளிவிவரப்பட்டியல். ஆண்டுதோறும் மலேரியா நோயைத் தடுக்கவும், அதற்கானத் தடுப்பு மருந்து வழங்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை கொடுக்கவும் இந்தியா செலவிடும் தொகை 11,640 கோடி ரூபாய்’ என்கிறது உலக சுகாதார நிறுவனம். 2016-ம் வருடம் மட்டும் உலகம் முழுக்க 21,59,00,000 பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டு, அதில் 4,45,000 பேர் மரணமடைந்திருக்கிறார்கள்.

132 கோடி மக்கள்தொகை கொண்ட நம் இந்தியாவில் `தூய்மை இந்தியா’, `சுகாதாரமான இந்தியா’ எனப் பல்வேறு திட்டங்கள் கொண்டுவந்தாலும், சுகாதாரச் சீரழிவால் பல நோய்கள் உண்டாகின்றன. அவற்றில் மலேரியாவால் 1,31,70,000 பேர் பாதிக்கப்பட்டு, ஒரு வருடத்தில் மட்டும் 23,990  உயிர் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

உலக மலேரியா ஆய்வறிக்கையின் படி 2014லில் இந்தியாவில் வசிக்கும் மக்களில் 22 சதவிகிதம் பேர் மலேரியா அதிகம் தாக்கும் பகுதிகளிலும், 67 சதவிகிதம் பேர் குறைவாகப் பாதிக்கும் இடங்களிலும், 11 சதவிகிதம் பேர் மலேரியா தொற்று பாதிப்பு இல்லாத இடங்களிலும் வாழ்வதாகத் தெரிவிக்கிறது.

மலேரியா நோய் என்பது கொசுக்கள் மூலம் பரவும் ஓர் ஒட்டுண்ணி ஆகும். இதற்கு, `பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்’ (Plasmodium vivax) என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் சாக்கடைக் கழிவுநீரில் இனப்பெருக்கம் செய்யும் பெண் அனோஃபிலெஸ் (Anopheles) கொசுக்கள் மூலமே இது பரவுகிறது.

பரவும் தன்மை;

மலேரியா ஒட்டுண்ணி தொற்றுள்ள அனோஃபிலெஸ் கொசு, மனிதனைக் கடிக்கும்போது ஒட்டுண்ணி ரத்தத்தில் கலந்து 30 நிமிடங்களுக்குள் அதிக வேகமாகக் கல்லீரலுக்குச் சென்றடையும். கல்லீரலை அடைந்த ஒட்டுண்ணியானது, மிக வேகமாக இனப்பெருக்கம் செய்யக் கூடியது. ஒரு சில ஒட்டுண்ணிகள் கல்லீரலில் செயல்படாமல் அங்கே தங்கியிருக்கும். இந்த ஒட்டுண்ணியானது எதிர்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் செயல்திறன் கொண்டு, பாதிப்பை உண்டாக்கும்.

இனப்பெருக்கம் அடைந்த ஒட்டுண்ணிகள், ரத்தத்தில் கலந்து ரத்தச் சிவப்பு அணுக்களை சேதப்படுத்தி, மேலும் அதிக அளவில் பரவும். இதன் மூலம் மற்ற சிவப்பணுக்களிலும் தொற்றை உண்டாக்கும்.

 

இனப்பெருக்கம் தொடர்ச்சியாக  இருக்கும் போது, உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்து காய்ச்சல் உண்டாகும். இந்த பாதிப்பானது அதிகக் காய்ச்சல் மற்றும் குளிர்க் காய்ச்சல் ஏற்படும்.

இந்த தொற்று இருப்பவர் உடலிலிருந்து நன்கு வளர்ச்சியடைந்து வுடுகிறது. பிறகு பாதிக்கப்பட்டவரை, அனோஃபிலெஸ் கொசு கடித்து ரத்தத்தை உறிஞ்சும்போது, இந்த ஒட்டுண்ணி மூலம் மற்றவர்களுக்கு மலேரியாவைப் பரப்பும். பரவும்.

இந்த பாதிப்பு குழந்தைகளுக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அனுகவேண்டும்.

உலக முழுவதும் பெரியவர்களைவிடவும்  5 வயதுக்குட்பட்ட குழந்தைகள்தான் மலேரியா காய்ச்சலால் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அதாவது 100-ல் 70% குழந்தைகளை பாதிக்கிறது.

உலகம் முழுவதும் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு குழந்தை மலேரியா நோய் தொற்றால் உயிர் இழப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்த நோயால் கர்பணிகளும்  குழந்தைகளுமே அதிகமாக பாதிக்கின்றனர்.

அதன் அறிகுறிகள்…

மலேரியா தொற்றுள்ள கொசு கடித்த, 10-15 நாளில் நோய் நம் உடலுக்குள் பரவத் தொடங்கும். நோய் எதிர்ப்புச் சக்தி மிகக் குறைவாக இருப்பவர்களுக்கு ஏழு நாள்களிலேயே நோய் பாதிப்பு உண்டாகும்.

நோய் பாதிப்புக்குள்ளானோர் 24 மணி நேரத்துக்குள் சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால், பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபாரம் (Plasmodium falciparum) என்னும் மலேரியா ஒட்டுண்ணியால் பாதிக்கப்பட்டு, கடுமையான நோயால் அவதிப்படுவர். இந்த பாதிப்பானது அதிகமாகும் போது உயிர் இழப்பு ஏற்படும்.

குழந்தைகளுக்கு மூளை சம்பந்தமான நோய், கடுமையான ரத்தச்சோகை, வளர்சிதை மாற்றம், சுவாசப் பாதிப்பு, மஞ்சள்காமாலை, மூளைக் காய்ச்சல் ஆகியவை உண்டாகலாம்.

மலேரியா காய்ச்சலை மூன்று கட்டங்களாக கண்டறியலாம்.

முதல் கட்ட நோயாளிக்கு லேசான காய்ச்சல், தலைவலி, உடல்வலி, வாந்தி, சோர்வு ஆகியவை இருக்கும். அதேபோல், தொடர்ந்து சுமார் அரை மணி நேரத்துக்கு குளிர்க் காய்ச்சலும், உடல் நடுக்கமும் உண்டாகும்.

இரண்டாவது கட்டத்தில் கடுமையான காய்ச்சல் சுமார் ஆறு மணி நேரத்துக்கும் மேலாக தொடரும்.

மூன்றாவது கட்டத்தில் காய்ச்சல் குறைந்தும், உடல் முழுவதும் வியர்வை வெளியேறும். உடல் சீக்கிரமாகவே  குளிர்ந்து காணப்படும்.

நோயாளியானவர்  இயல்பான நிலையில் இருப்பார். இதையடுத்து மறுநாளோ, ஒரு நாள்விட்டு ஒரு நாளோ அல்லது மூன்று, நான்கு நாள்களுக்கு ஒரு முறையோ மீண்டும் காய்ச்சல் உண்டாகும். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக ரத்தப் பரிசோதனை அவசியமாகும்.

·        பரிசோதனை முறைகள்;

·        ரத்த அணுக்களில் கிருமிப் பரிசோதனை

·        . மலேரியா எதிர் அணுக்கள் பரிசோதனை

·        ‘க்யூபிசி’ (QBC Malaria Test) பரிசோதனை

·        ஆர்.டி (RD – Rapid Diagnostic Test) – பி.சி.ஆர் (PCR) மற்றும் நெஸ்டெட் பி.சி.ஆர் (Nested PCR) பரிசோதனை
ரத்த அணுக்கள் மொத்தப் பரிசோதனை.

தடுக்கும் முறைகள்;

மலேரியா நோயிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கு குளோரோகுயின் (Chloroquine), பிரைமாகுயின் (Primaquine) போன்ற மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். அதேபோன்றே, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளை முறையாகவும், அவர் கொடுத்த காலம் வரை தவறாமல் எடுத்துக் கொள்வதன்  மூலம் மலேரியா நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

நம் வீட்டைச் சுற்றி  தேவையில்லாத  உடைந்த பாத்திரம்,டயர், தேங்காய் மூடியில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது, தண்ணீர் தேங்கியிருந்தால் அதில் கொசு ஒழிப்பு மருந்து தெளிப்பது ஆகியவற்றைச்  செய்து கொசுக்களை ஒழிக்கலாம்.

இரவில் கொசுவலை பயன்படுத்துவதன் மூலம் மலேரியா பாதிப்பில் இருந்து தப்பிக்க உதவும். காய்ச்சல் இருந்தால் நீங்களாக மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளக் கூடாது. அது ஆபத்தில் முடியும். மருத்துவரைச் சந்தித்து  அவரின் ஆலோசனைக்குப் பிறகே மருந்து,மாத்திரை எடுத்துக் கொள்ளவேண்டும்.

மலேரியவை 2030-ம் ஆண்டுக்குள் குறைந்தது 35 நாடுகளில் மலேரியாவால் ஏற்படும் இறப்பை 90 சதவிகிதம் கட்டுப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.