
அதிமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்ற சசிகலா உருக்கமாக பேசினார்.
இன்று கட்சி தலைமை அலுவலகத்தில், கட்சி அவைத்தலைவர் அவருக்கு பொதுச்செயலாளராக பதவி பிரமாணம் செய்து வைத்ததார்.
பொதுச்செயலாளர் பதவி ஏற்றதும், சசிகலா ஜெயலலிதா அமர்ந்த அதே நாற்காலியில் அமர்ந்தார். அதையடுத்து அவர் பேசியதாவது,
தற்போது நமது அம்மா நம்மோடு இல்லாவிட்டாலும், அவர் வளர்த்த அதிமுக கட்சி இன்னும் நூறு ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி செய்யும் என்றார்.
மேலும் என் வாழ்க்கையே அம்மாதான் என்றார். அவவாறு பேசும்போது அவரது கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.
உடல்நலம் சரியில்லாமல் 75 நாட்கள் சிகிச்சை பெற்ற அம்மா, இறுதியில் கடவுளிடம், கடவுளின் குழந்தையாக சென்றுவிட்டார்.
அவரது உருக்கமான பேச்சு கட்சி உறுப்பினிர்களிடையே மேலும் அனுதாபத்தை ஏற்படுத்தியது.
Patrikai.com official YouTube Channel