வரும் செப்டம்பர் 2019 முதல் ஸ்விஸ் வங்கியில் அக்கவுண்ட் வைத்திருக்கும் இந்தியர்களின் விபரங்களை வெளியிட அந்நாட்டு அரசு ஒப்புக்கொண்டுள்து.
இந்தியாவும் சுவிட்சர்லாந்தும் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன்படி ஸ்விஸ் வங்கிகளில் பணம் வைக்கும் இந்தியர்களின் விபரங்கள் வரும் 2019 செப்டம்பர் முதல் ஆட்டோமேட்டிக் முறையில் தானாக இந்திய அரசை வந்தடையும். இதன் மூலம் வெளிநாட்டு வங்கிகளில் இந்திய பண முதலைகளின் கறுப்புப்பணம் தேங்குவதை இந்தியா கண்காணிக்கவும் தடுக்கவும் இயலும்.
கடந்த ஜூன் 6-ஆம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ஸ்விஸ் அதிபர் ஜான் ஸ்னிடர் அம்மனும் ஜெனிவாவில் சந்தித்து இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் இந்திய வருவாய் துறை செயலர் ஹஷ்முக் ஆதியா மற்றும் ஸ்விஸ் நாட்டின் சர்வதேச பொருளாதார விவகாரங்களின் செயலர் ஜாக்குவஸ் வாட்வில்லியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் இதையொட்டி இருநாடுகளுக்கும் இடையே தகவல்களை பரிமாறிக்கொள்ளும் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.