ஆப்பிரிக்க நாடுகளில் வசித்து வரும் பழங்குடி இன மக்கள்,  உணவுக்காக வேட்டையாடுவதும், மூங்கில் மற்றும் பனையோலை வேய்ந்த குடில்களில் வசிப்பதும் இவர்களது வாழ்க்கை முறை.
ஆப்பிரிக்க பழங்குடியினரின் விசித்திரமான பழக்கவழக்கங்கள்!  அவர்களின் வாழ்க்கை முறையும் வித்தியாசமாக இருக்கிறது.
அதுபோலவே, மாளாவி என்ற ஆப்ரிக்க நாட்டில் பெண்களுக்கு பேய் பிடிப்பதாக நம்மப்படுகிறது. நமது இடங்களில் பேய் விரட்டுபவரை பூசாரி, கோடாங்கி என்று அழைப்பது உண்டு. அதுபோல மாளாவி நாட்டில் பேய் ஓட்டுபவரை?!  “ஹைனா” என அழைக்கின்றனர்.
malavi-people
வயதுக்கு வந்த இளம்பெண்கள் மீது தீய ஆவி எனப்படும் பேய் போன்றவற்றின் பிடியில் இருந்து  பாதுகாக்க, தங்களது வயதுக்கு வந்த இளம்பெண்களை கன்னி கழிக்க, பேய் ஓட்டும் ஹைனாவிடம்  ஒரு இரவு முழுவதும் வைக்கின்றனர்.
பெண் குழந்தைகள் பருவம் எட்டியவுடன் ஏற்படும்  மாதவிடாய் வந்த பிறகு, அவர்களுக்கு தீய ஆவிகளின் பிடியில் இருந்து தப்பிக்க  இந்த சடங்கு நடைபெறுகிறது.
அன்று இரவு முழுவதும் பேய் ஓட்டும் ஹைனா என்பவர் அந்த பெண்ணுடன்  பூஜைகள் செய்து உடல்உறவில் ஈடுபடுவார். பின்னர் காலையில் அனுப்பி விடுவார்.
இப்படி செய்வதால் அந்த இளம்பெண்ணுக்கு  பிற்காலத்தில் தீய ஆவிகளிடம் இருந்து  தீங்கு ஏற்படாது என்பது மாளாவி மக்களின் நம்பிக்கை.

இளம்பெண்ணை பூஜைக்கு தயார் செய்யும் காட்சி
இளம்பெண்ணை பூஜைக்கு தயார் செய்யும் காட்சி

இதுகுறித்த தகவல்கள் பிபிசி எடுத்த ஆவணப் படம் மூலம் வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது.
இந்த சடங்கிற்காக பெற்றோர்களே தங்களது பெண் பிள்ளைகளை இவரிடம் அனுப்பி வைப்பதோடு, பலாத்காரம் செய்வதற்கு அவருக்கு சம்பளமும் கொடுக்கின்றனர். இதற்காக இவர் வாங்கும் தொகை 4 அமெரிக்க டாலர் முதல் 7 டாலர் வரை.
எரிக் அன்னிவா
எரிக் அன்னிவா

இதுகுறித்து, மாளாவி நாட்டில் உள்ள ‘ஹைனா’  எனப்படும் ‘எரிக் அன்னிவா’ கூறும்போது, தான் இதுவரை, பூஜை என்ற பெயரில் 104 பெண்களுடன் உறவுகொண்டுள்ளேன் என்றார். மேலும் தானாக விரும்பிப் போய் இதனை செய்வதில்லை. இளம்பெண்களின் பெற்றோர்களே அனுப்பி வைக்கிறார்கள் என்றார்.
பல பெண்களுடன் உடலுறவு கொண்டதால் எரிக் அன்னிவாக்கு தற்போது எய்ட்ஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த உண்மைகள் அனைத்தும் பிபிசி மூலம் வெளிஉலகத்துக்கு தெரியவந்ததை அடுத்து ஒரே நாளில் உலகம் முழுவதும் பிரபலம் ஆனார் எரிக் அன்னிவா.
இது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதையடுத்து அந்நாட்டு அதிபர் பீட்டர் முத்தாரிக்கா இவரை கைது செய்ய உத்தரவிட்டார்.
இதனையடுத்து எரிக் அன்னிவா கைது செய்யப்பட்டுள்ளார்.