ஜெய்ப்பூர் :
வட மாநிலங்களில் மீண்டும் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே பஞ்சாபில் பன்றி காய்ச்சலால் 25க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், ராஜஸ்தானில் பலி எண்ணிக்கை 91 ஆக உயர்ந்து உள்ளது.
2019 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் பிப்ரவரி 6-ம் தேதி வரை பன்றிக்காய்ச்சலால் 91 பேர் இறந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகபட்சமாக ஜோத்பூர் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 26 பேர் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்து இருப்பதாக ராஜஸ்தான் சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
‘
உலகையே அச்சுறுத்தி வரும் ஸ்வைன் புளு என்ற பன்றிக் காய்ச்சல் நோய் கடந்த ஆண்டு முதல் இந்தியாவிலும் பரவி மக்களை மிரட்டி வருகிறது. இதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையிலும் பன்றி காய்ச்சல் பரவி வருகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் குர்தாஸ்புர், லூதியானா, பாட்டியாலா போன்ற பகுதிகளில் பன்றி ககாய்ச்சல் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. மேலும் டில்லி,அரியானா மற்றும் மகராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தற்போது ராஜஸ்தானில் பன்றி காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கணக்கெடுப்பின்படி மாநிலத்தில்,2,606 பேருக்கு நோய் ஸ்வான் புளு பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மாநிலத்தின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜெய்ப்பூர், ஜோத்பூர், உதய்பூர், பிகானர் மற்றும் அஜ்மீர் மாவட்டங்களில் 6 நாட்களில் 9.58 லட்சம் பேருக்கு பன்றி காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் 32,540 பேருக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி 1ந்தேதி முதல் பிப்ரவரி 6-ம் தேதி வரை பன்றிக்காய்ச்சலால் 91 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.