டில்லி:

காங்., ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்காவை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத மோடி அரச, அவரது கணவர்  ராபர்ட் வதேராவிடம் விசாரணை என்ற பெயரில் தொல்லை கொடுத்து வருகிறது.

பிரியங்காவின் கணவர்  ராபர் வதேரா, லண்டனில் சொத்து வாங்கியது உண்மையா என்பது குறித்து  அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரிடம்  நேற்று சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில், இன்றும்   2 மணி நேர விசாரணை நடத்தினர்.

ராபர்ட் வதேரா விசாரணைக்கு ஆஜரான போது

மத்தியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது சில தொழில் நிறுவனங்களுககு காங்.,கட்சியின் தலைவர் ராகுல்காந்தியின் சகோதரி பிரியங்காவின் கணவரான ராபர்ட் வதேரா சாதகமாக செயல் பட்டதாகவும், அதற்கு பிரதிபலனாக அவருக்கு லண்டனில் ரூ.18 கோடி மதிப்புள்ள சொத்து வாங்கி தரப்பட்டிருப்பதாகவும் பாரதிய ஜனதா கட்சியினர் புகார் கூறிவந்தனர்.

இந்த புகார் தொடர்பாக ராபர்ட் வதேரா, மனோஜ் அரோரா ஆகியோர் மீது அமலாககத்துறை அதிகாரிகள் வழககுப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழககு தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராபர்ட் வதேரா முன்ஜாமின் பெற்றுள்ளார். வரும் பிப்ரவரி 16 ம் தேதிவரை அவரை கைது செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதற்கிடையில். இதுதொடர்பான விசாரணைககு ஆஜராக வேண்டும் என அமலாககத்துறை மனுத்தாககல் செய்யததை ஏற்று வதேரா நேற்று ஆஜர் ஆனார். அமலாககத்துறை அலுவலகம் சென்ற வதேராவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.  தொடர்ந்த இன்று 2 வது நாளாக வதேரே அமலாககத்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அவருடன் வழககறிஞர்களும் சென்றிருந்தனர்.

வதேராவிடம் லண்டன் சொத்துககளை வாங்கியது தொடர்பாக அமலாககத்துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். லண்டன் சொத்துககள் தன்னுடையது அல்ல என வதேரா மறுத்தபோதும் 2 மணி நேரமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் லண்டன் சொத்து பற்றியே பல்வேறு கோணங்களில் விசாரித்தனர். அப்போதும் லண்டன் சொத்துகள் தனக்கு சொந்தமானவை அல்ல என வதேரா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

கணவர் வதேராவுடன் பிரியங்கா

பின்னர் மதிய உணவுக்காக வதேரா புறப்பட்டு சென்றார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய  வதேரா, ‘‘என் மனைவி பிரியங்கா காங்கிரஸ் கட்சியின் உத்தரபிரதேச மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதை எதிர்கொள்ள முடியாமல் மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கையாக இத்தகைய முயற்சியில் இறங்கியுள்ளது,’’ என்றார்.