உயர் சுகாதாரத் தரத்துடன் கூடிய உணவுவகைகளை டெலிவரி செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ‘ஸ்விக்கி சீல்’ என்ற புதிய முத்திரையை ஸ்விக்கி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
புனேவில் தொடங்கப்பட்டுள்ள இந்த ‘ஸ்விக்கி சீல்’ நடவடிக்கை விரைவில் நாடு முழுவதும் உள்ள 650 நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
சுகாதாரம் மற்றும் உணவின் தரம் குறித்து வாடிக்கையாளர்கள் நேரடியாக சரிபார்க்க அனுமதிக்கும் உணவகங்களுக்கு இந்த ‘Swiggy Seal’ என்ற கெளரவப் பேட்ஜ் வழங்கப்படுகிறது.
இந்த முன்முயற்சி தரத்தை பராமரிப்பது மட்டுமல்லாமல்; Swiggy பயனர்களுக்கான உணவு அனுபவத்தை மேம்படுத்துவதாகவும் இது அமையும்.
‘ஸ்விக்கி சீல்’ முத்திரை வழங்கப்பட்ட உணவகங்கள் Swiggy இன் செயலியில் முக்கியமாகக் குறிக்கப்படும், வாடிக்கையாளர்கள் அவற்றை எளிதாகக் கண்டறிந்து, தரமான பேக்கேஜிங்கில் வழங்கப்படும் உயர்தர, சுகாதாரமான உணவுக்காகத் தேர்வுசெய்ய அனுமதிக்கிறது.
7 மில்லியன் சரிபார்க்கப்பட்ட வாடிக்கையாளர்கள் கடந்த ஆறு மாதங்களில் ஸ்விக்கி உணவகங்களை மதிப்பாய்வு செய்துள்ளனர்.
வாடிக்கையாளர்களின் மதிப்பாய்வுகளுக்கு ஏற்ப செயல்முறையை உறுதி செய்யும் உணவகங்களின் ‘ஸ்விக்கி சீல்’ முத்திரை தொடரும் என்றும் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தாத உணவகங்களுக்கு வழங்கப்பட்ட ‘ஸ்விக்கி சீல்’ முத்திரை திரும்பபெறப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
‘ஸ்விக்கி சீல் உணவகங்களில் சுகாதார நடைமுறைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டும் உயர்தர பேக்கேஜிங்கில் சுத்தமான, நன்கு சமைத்த உணவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டும் ஸ்விக்கி நிறுவனம் இதை அறிமுகம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.