சென்னை:
தமிழகத்தை சேர்ந்த திருநங்கை ஒருவர் ஸ்விக்கி நிறுவனத்தின் முதன்மை திட்ட மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் முதன்மை நிறுவனமான ஸ்விக்கி தனது நிறுவத்தின் முதன்மை திட்ட மேலாளராக சம்யுக்தா விஜயன் என்ற திருநங்கையை நியமனம் செய்துள்ளது.
சம்யுக்தா பொள்ளாச்சியை சேர்ந்தவர். அங்கு பிறந்து வளர்ந்த சம்யுக்தா 10 ஆண்டுகளாக அமேசான் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். அதன்பின்னர் ஆடை வடிவமைப்பில் ஈடுபட்ட சம்யுக்தா ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பேஷன் டிசைனராகவும் இருந்தார்.
தற்போது அவர் சுவிக்கி நிறுவனத்தின் தலைமை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
[youtube-feed feed=1]