சென்னை:
தமிழ்நாடு முழுவதும் ஸ்விகி (Swiggy) மூலம் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.

அதாவது, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஸ்லாட்’ என்ற முறையை திரும்ப பெற்று, ஏற்கனவே வழங்கிவந்த ‘டர்ன் ஒவர்’ என்ற தொகையை மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது, இந்த போராட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஸ்விகி ஊழியர்கள் பங்கேற்றுள்ளதால், உணவு டெலிவரி சேவை பாதிக்கப்படவுள்ளது.
Patrikai.com official YouTube Channel