கொச்சி: பழைய இந்திய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த ஸ்வீடன் நாட்டு பெண்ணுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு கொச்சி விமான நிலையத்தில் மத்திய தொழில் துறை பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டனர். குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்து ஸ்வீடன் நாட்டு சுற்றுலா பயணியிடம் சோதனை நடத்தினர். கொழும்பு செல்வதற்காக கொச்சி விமான நிலையத்தில் அவர் காத்திருந்தார்.

அவரிடம், 49 ஆயிரத்துக்கான பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள், ஐந்து 500 ரூபாயும் பையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  செல்லாத ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பது சட்ட விரோதம்.

எனவே அந்த பணம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. கடைசியாக 2014ம் ஆண்டு தாம் இந்தியா வந்ததாகவும், அப்போது யாரும் என்னிடம் பணமதிப்பிழப்பு பற்றி தெரிவிக்கப்படவில்லை என்று கூறியிருக்கிறார்.

இதையடுத்து, அங்கமாலி நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு இரண்டரை லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதன் பிறகே அந்த ஸ்வீடன் நாட்டு சுற்றுலா பயணி கொழும்புக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார்.