நெல்லை:
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண்ணைக் கொன்ற  கொன்ற கொலையாளி நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் வைத்து காவல்துறையினரால்  சுற்றி வளைக்கப்பட்டான்.  அப்போது அவன், தனது கழுத்தை பிளேடால் அறுத்து கொண்டான்.  உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இவன், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகில் பரமசிவம் என்பவரின் மகன் ராம்குமார்.

ராம்குமார்
ராம்குமார்

கொலையாளி படத்தை காவல்துறை வெளியிட்டபோது,  சூளைமேட்டில்  இவன் தங்கியிருந்த லாட்ஜின் வாட்ச்மேன் அடையாளம் காட்டியதன் பேரில்  காவல்துறையினர் இவனை வளைத்துப்  பிடித்துள்ளனர்.
2dd0fce3-c176-4604-b804-4381a59a50df
தற்போது ராம்குமாரின் தம்பி , தங்கை உட்பட குடும்பத்தினர் அனைவரும் காவல்துறை விசாரணையில் இருக்கிறார்கள்.
கொலை செய்த போது  ராம்குமார்  உடுத்தியிருந்த ஆடைகளையும்  காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர்.மேலும் இவன் சென்னையில்  பணிபுரிந்து வந்ததாகவும்  அங்கு ஒரு லாட்ஜில் தங்கியிருந்ததாகவும்  தெரியவருகிறது. சுவாதியை கொலை செய்ய அவனுக்கு இன்னொரு நபர் உதவியதாகவும் ஒரு தகவல் உலவுகிறது.