சுவாதியை கொலை செய்தது பா.ஜ.க. பிரமுகர் “கருப்பு” முருகானந்தத்தின்  இந்துத்துவ கூலிப்படைதான் என்று, தமிழச்சி என்பவர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியது  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த முகநூல் பதிவை பல்லாயிரம் பேர் பார்த்ததுடன், பல நூறு பேர் பகிர்ந்திருப்பதால், இப்பதிவு வைரலாக பரவி வருகிறது.

"பேஸ்புக்" தமிழச்சி - சுவாதி
“பேஸ்புக்” தமிழச்சி – சுவாதி

(தமிழச்சி என்ற பெயரில் முகநூலில் தொடர்ந்து பரபரபரப்பைக் கிளப்பி வருபவரின் இயற்பெயர் யுமா. தான் பாண்டிச்சேரியை பூர்விகமாக கொண்டிருந்தாலும், மூன்று தலைமுறைகளாக பிரான்சில் செட்டிலாகிவிட்ட குடும்பம் என்று அவரே தெரிவித்திரு்ககிறார். பிரான்சில் இவர் எக்ஸ்போட் பிஸினஸ் மற்று கிராணைட் தொழில் செய்து வருவதாகவும் அவரே தெரிவித்திருக்கிறார்.)
இந்த நிலையில் தமிழச்சி மீது, கருப்பு முருகானந்தம் காவல்துறையில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சுவாதி கொலை வழக்கு,  ஆரம்பத்தில் இருந்தே பலவித ஐயங்களை ஏற்படுத்தி வந்தது.
குற்றவாளி யாரென தெரியாத ஆரம்ப நிலையிலேயே “பிலால் மாலிக்” என்ற இஸ்லாமிய இளைஞர்தான் கொலையாளி என்று ஒய்.ஜி. மகேந்திரன் உட்பட பலர் முகநூலில் பதிவிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்கள்.
சுவாதியின் தந்தை சந்தானகோபால கிருஷணன்
சுவாதியின் தந்தை சந்தானகோபால கிருஷணன்

“விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் எங்களை தொல்லைப்படுத்துகிறார்கள்” என்று சுவாதியின் தந்தை சந்தானகோபால கிருஷணன்முதல்வரின் தனிப்பிரிவில் புகார் கொடுத்தார்கள். “மகள் கொலை செய்யப்பட்ட நிலையில், காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல், இப்படி புாகர் தெரிவிக்கிறார்களே” என்ற விமர்சனம் அப்போது எழுந்தது.
இக்கொலையையை செய்ததாக நெல்லையைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை காவல்துறை கைது செய்தது.  கைது செய்யப்படும்போது, தனது கழுத்தை பிளேடால் ராம்குமார் அறுத்துக்கொண்டதாக காவல்துறை தெரிவித்தது.
போலீஸ் பிடியில்... ராம்குமார்
போலீஸ் பிடியில்… ராம்குமார்

ஆனால், “காவல்துறையினருடன் வந்த கூலிப்படையினர்தான் தனது கழுத்தை அறுத்ததாக  ராம்குமாரும், அவரது குடும்பத்தினரும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், “கொலை செய்யப்பட்ட சுவாதி, தான் பணிபுரிந்த இன்போசிஸ் நிறுவன ரகசியங்களையும், நாட்டின் ரகசியங்களையும் விற்றார். அதன் பின்னணியிலேயே கொலை செய்யப்பட்டார்” என்று ராம்குமாரின் தாய் புகார் தெரிவித்தார்.
"தமிழச்சி" பதிவு
“தமிழச்சி” பதிவு

இதற்கிடையே, தமிழச்சி என்பவர், தனது முகநூல் பக்கத்தில் அதிர்ச்சிகரமான பதிவு ஒன்றை எழுதினார்.
அதில், “தஞ்சையைச் சேர்ந்த பா.ஜ.க.வின் மாநில இளைஞரணிச் செயலாளர் ‘கருப்பு (எ) முருகானந்தம் தஞ்சையைச் சேர்ந்தவர். இவர்’ மீது மதக் கலவரம் ஏற்படுத்துவது, சிறுபாண்மையினர் மீது வன்முறை பிரயோகிப்பது, கொலைகள் செய்வது உட்பட 38 வழக்குப் பதிவுகளும், அதில் 20 வழக்குகள் விசாரணையிலும் உள்ளன.   கிட்டத்தட்ட 40 பேர்கள் வரை படுகொலை செய்தவர்.   சமீபத்தில் நடைப்பெற்ற தேர்தலில் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
இந்த கருப்பு முருகானந்தத்தின் கூலிப்படையை நிர்வகிப்பது, அப்படைக்கு ஆள் சேர்ப்பது, பெண்களை சப்ளை செய்வது போன்ற பங்களிப்பைச் செய்து வருபவர் தென்காசியைச் சேர்ந்த தங்கதுரை. இவர் பா.ஜ.க, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளில் செயல்பட்டு தற்போது இந்து முன்னணியில் இயங்கி வருகிறார்.
சுவாதியை படுகொலை செய்ய வேண்டும் என்ற திட்டம் உருவாக்கப்பட்ட போது ‘கருப்பு (எ) முருகானந்தம்’ தான் அந்த பாதகத்தைச் செய்யத் துணிந்தார். அதற்காக அவருடைய நெருங்கிய நண்பரான ‘தென்காசி’ தங்கதுரை ஆட்களை சப்ளை செய்தார்.  முத்துக்குமார், இஸ்மாயில், வீராசாமி என்ற அந்த கூலி ஆட்கள்தான் சுவாதியை கொன்றது.
சுவாதியை கொன்று அந்த பழியை இஸ்லாமிய இளைஞர் மீது போட வேண்டும். அதன் மூலமாக இஸ்லாமிய எதிர்ப்பு அரசியலை தீவிரப்படுத்த வேண்டும் என்பது இந்து பரிவார அமைப்புகளின் திட்டம்.
யார் மீது பழியைப்போடுவது என்று,  தென்காசி கிராமங்களில் தேடித் திரிந்ததில் கிடைத்த அப்பாவிதான் ராம்குமார். இந்த ராம்குமாரை பிடிக்க அவர் வீட்டுக்குச் காவல்துறையினர் சென்றபோது தங்கதுரையின் கூலிப்படையினரும் சென்றனர்.  அவர்கள் தான் ராம்குமாரின் கழுத்தை அறுத்தவர்கள்.
இந்த கொலையாளிகளுடன் சுவாதியின் அப்பாவிற்கும் சித்தாப்பாவிற்கும் என்ன தொடர்பு? இந்த கூலிப்படைகளோடு அவர்கள் போனில் பேசிய தகவல் எனக்கே கிடைத்திருக்கிறது. தமிழக காவல்துறையினருக்கு கிடைக்காதா” என்று தமிழச்சி தனது முகநூல் பக்கத்தில் எழுதி, பரபரப்பை கிளப்பியிருந்தார்.
மோடியுடன் "கருப்பு" முருகானந்தம்
மோடியுடன் “கருப்பு” முருகானந்தம்

இந்த நிலையில்தான், தமிழச்சி என்பவரால் குற்றம்சாட்டப்படும் பாஜக பிரமுகர்  முருகானந்தம், திருவாரூர் எஸ்.பியிடம் நேற்று தமிழச்சி மீது புகார் கொடுத்திருக்கிறார்.  இதையடுத்து,  “பா.ஜ.க. மத்தியில் ஆளும் கட்சி. ஆகவே தமிழச்சி என்கிற யூமா, பிரான்சில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஒரு பேச்சு கிளம்பியிருக்கிறது.
இதற்கிடையே சுவாதி கொலை வழக்கில் தன்னை இணைத்து  முகநூலில் எழுதி வரும்  திலீபன் மகேந்திரன் என்பவர் மீது  கடந்த வாரம்  திருவாரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் கருப்பு முருகானந்தம். நேற்று  தமிழச்சி மீது திருவார் எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார்.
சுவாதி கொலை வழக்கு  நீண்டதொரு மர்மப்பாதையில் சென்றுகொண்டிருக்கிறது.

  • டி.வி.எஸ். சோமு