நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து சுவாதி என்ற இளம்பெண்ணைக் கொன்ற கொலைகாரன் பிடிபட்டதாக தகவல் உலவுகிறது.

கொலைகாரனாக இருக்கலாம் என போலீஸ் வெளியிட்ட சிசிடிவி படம்
கொலைகாரனாக இருக்கலாம் என போலீஸ் வெளியிட்ட சிசிடிவி படம்

சுவாதியை கொன்ற கொலைகாரனை காவல்துறை தீவிரமாக தேடிவருகிறது. இந்த நிலையில் சென்னை திருவான்மியூரில் பதுங்கியிருந்த கொலைகாரனை காவல்துறை பிடித்துவிட்டதாக நேற்று ஒரு தகவல் பரவியது. ஆனால் காவல்துறை இதுகுறித்து ஏதும் சொல்லவில்லை.
இந்த நிலையில் ஒட்டன் சத்திரத்திரத்தில் வைத்து கொலைகாரனை காவல்துறை பிடித்துவிட்டதாக தற்போது ஒரு தகவல் உலவுகிறது.
ஒட்டன் சத்திரம் யூனியன் அலுவலகம் அருகே ;சிலர், இரு வாலிபர்களை   வலுக்கட்டாயமாக ஜீப் ஒன்றில் ஏற்றியிருக்கிறார்கள். அப்போது இரு தரப்புக்கும் வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டிருக்கிறது.
யாரோ இரு இளைஞர்களை கடத்தல் கும்பல் பிடித்துச் செல்ல முயற்சிக்கிறது என்று நினைத்த பொதுமக்கள், போலீஸுக்கு தகவல் சொல்லியிருக்கிறார்கள்.  உடனடியாக லோக்கல் போலீஸ் வந்திருக்கிறது.
வாலிபர்களை வாகனத்தில ஏற்ற முயன்றவர்களோ, “நாங்கள் தனிப்படை போலீஸார். சுவாதி கொலை வழக்கு விசயமாக இவர்களை சென்னைக்கு அழைத்துச் செல்கிறோம் என்று தெரிவித்து செள்ளனர்.
ஆகவே தற்போது போலீஸ் வசம் கொலைகாரன் இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதே நேரம் மதுரையில் சரண் அடைந்ததாகவும், சென்னையில் சரண் அடைந்ததாகவும் இருவேறுவிதமான தகவல்களும் உலவுகின்றன.
ஆனால் காவல்துறை இதுவரை அதிகாரபூர்வ தகவல் ஏதும் தெரவிக்கவில்லை.