வைகுண்ட ஏகாதசி : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

Must read

சென்னை

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டுள்ளது.

இன்று வைகுண்ட ஏகாதசி திருவிழா கொண்டாடப்படுகிறது.   இதையொட்டி அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டுள்ளது.  கொரோனா பரவல் காரணமாகக் கட்டுப்பாடு அமலில் உள்ளதால் பெரும்பாலான கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இன்று சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மிகவும் குறைந்த அளவில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்க வாசல் தரிசனத்துக்கு மாலை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  அவ்வகையில் இன்று முதல் 21 ஆம் தேதி வரை மாலை 4.15 மணி முதல் இரவு 9 மணி வரை தரிசனம் செய்யலாம்.

More articles

Latest article