சென்னை: தமிழக மக்களின் வீடுகளில் சாமி அறை உள்ளது ஆனால், ‘தமிழ்நாட்டு மக்களிடம் வெறுப்புணர்வு இல்லை என உ.பி. மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் குழந்தைகள் மரணம் அடைந்த செய்தியில் சர்ச்சைக்குள்ளான உ.பி. மருத்துவர் கஃபில்கான் பெருமிதத்துடன் தெரிவித்து உள்ளார்.
உத்தரப் பிரதேசம் கோரக்பூரில் அரசு மருத்துவமனையில் பணியாற்றியவர் கஃபில்கான். அவரது பணிக்காலத்தின்போது, ஆக்ஸிஜன் பற்றாக்குறையில் 63 குழந்தைகள் பலியாகினர். இதற்கு காரணம் மருத்துவர்களின் அஜாக்கிரதை என குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் குறித்து பேசிய கபில்கான் மீது உ.பி. மாநில அரசு துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர், அவர் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார். 63 குழந்தைகள் ஆக்ஸிஜன் இன்றி பலியானதற்கும் மருத்துவர் கபீல்கானுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை, அந்த வார்டுக்கு இவர் பொறுப்பாளரும் இல்லை, ஆக்ஸிஜன் சிலிண்டர் வாங்கியதற்கும், பணம் செலுத்தாமல் இருந்ததற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் உ.பி.யில் இருந்த வெளியேறிய நிலையில், தமிழ்நாட்டில் பணியாற்றி வருகிறார்.
தற்போது உதயநிதி பேசிய சனாதனம் குறித்த கருத்து நாடு முழுவதும் சர்ச்சையான நிலையில், கஃபில்கான் தனது கருத்தை தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் நான் தற்போது பணியாற்றி வருகிறார். என்னை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் வேறுபடுத்தி பார்த்து இல்லை, அதாவது இஸ்லாமிய மருத்துவராக பார்த்தது இல்லை என்றவர், தன்னை ஒரு குழந்தை நல மருத்துவராக மட்டுமே பார்க்கிறார்கள் என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய மருத்துவமனைகளிலும் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன, ஆரம்ப சுகாதார நிலையங்கள் சிறப்பாக இருப்பதாக தெரிவித்தவர், தமிழ்நாட்டில் உள்ள அனைவரது வீடுகளிலும் சிறிய அளவிலாவது சாமி அறை உள்ளது, ஆனால் அவர்களிடம் வெறுப்புணர்வு இல்லை என்று பெருமிதத்துடன் கூறினார்.
மேலும், இந்தியாவில் இருக்கும் இடஒதுக்கிட்டை ஒழிக்கவே நீட் தேர்வு கொண்டு வரப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டியவர், பொதுத்தேர்வில் 80சதவிகிதம் மதிப்பெண் பெற்ற ஒருவர் மருத்துவர் ஆக முடியாது, அதேவேளையில் நீட் தேர்வில் 20 சதவிகிதம் மதிப்பெண் பெற்றவர் மருத்துவராக முடியும் என்பது அநீதி இல்லையா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.