
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இன்று சென்னை வந்துள்ளார்.
சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்த பிறகு, மாலை 5.30 மணிக்கு மயிலாப்பூர் ரோட்டரி கிளப் நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பிறகு வீடு திரும்பி அங்கு தங்கும் சுவாமி, நாளை காலை விமானத்தில் டில்லி திரும்புவகிறார்.
இவர் அடிக்கடி தமிழர்களை பொறுக்கிகள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதுவதால் பலரும் வருத்தத்தில் இருக்கிறார்கள். ஆகவே அவரது வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சமீபத்தில் அமெரிக்கா சென்ற சுவாமிக்கு அங்குள்ள தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel