
சென்னை: கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக, முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரம்தாழ்ந்த பதிவு ஒன்றை பகிர்ந்தார் நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர். இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். பத்திரிகையாளர்கள் தரப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதுடன், சேகரின் வீட்டை முற்றுகையிடும் போராட்டமும் நடந்தது.
அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, எஸ்.வி.சேகர் தலைமறைவானார்.
இந்த நிலையில் அவர் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
“அவர் பிரபலமான மனிதர் என்பதாலும், முன்னாள் எம்.எல்.ஏ. என்பதாலும் முன்ஜாமின் கிடைக்கக் கூடும். இதையடுத்து கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்திருக்கிறார் எஸ்.வி.சேகர்” என்று கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]