சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் இன்று இரவு சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார். 10 நாட்களுக்கு கழித்து சென்னை திரும்பவுள்ளார்.

இந்நிலையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சீருடையில் உள்ள போலீஸ்காரர்களை தாக்கியது தவறு. போலீசாரும் வரம்பு மீறக்கூடாது. ஆடிட்டர் குருமூர்த்தி என்னுடைய 25 வருட நண்பர். அடிக்கடி நாங்கள் சந்திப்பது வழக்கம். நான் கட்சி தொடங்குவது உறுதி.

ஆனால், இன்னும் தேதி உறுதியாகவில்லை. பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் தண்டனை கிடைக்க வேண்டும். பத்திரிகையாளர்களை பற்றி எஸ்.வி.சேகர் இழிவாக பதிவு செய்தது மன்னிக்க முடியாத குற்றம்’’ என்றார்.

பாரதிராஜா உள்ளிட்ட பலர் உங்களை எதிர்ப்பது குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதில் கூறுகையில், ‘‘அரசியலில் விமர்சனம் என்பது தவிர்க்க இயலாதது’’ என்றார்.