சென்னை:

பெண் ஊடகவியலாளர்கள் குறித்து நடிகர் எஸ்.வி.சேகர் சர்ச்சைக்குறிய கருத்துக்களை சமூக வலை தளத்தில் பதிவிட்டார். இதற்கு பத்திரிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.

 

போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து எஸ்.வி.சேகர் தலைமறைவானார். சொந்த பணி காரணமாக பெங்களூருவில் இருப்பதாகவும், 3 நாட்களில் திரும்பி வந்துவிடுவேன் என்று எஸ்.வி.சேகர் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்தார்.

இதற்கிடையில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி. சேகர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று விசாரணை நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதி முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். எஸ்.வி.சேகரை கைது செய்ய தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டார்.