எஸ்.வி. சேகரின் புளுகு மூட்டை: கவிஞர் சல்மா

நெட்டிசன்:

கவிஞர் ராஜாத்தி சல்மா (Rajathi Salma) அவர்களின் முகநூல் பதிவு:

திமுக தலைமைக்கும், வைகுண்டராஜனுக்கும் கட்டளை இட்டதாக சொல்லிக்கொள்கிற எஸ் வீ சேகர் என்கிற புழுகு மூட்டை இட ஒதுக்கீட்டிற்கு எதிராகவும் கூட இந்த வீடியோவில் பேசி இருக்கிறார்.. தங்களை விமர்சிப்பவர்களை சாக்கடை என்கிற பொருள் வரும்படியும் பேசியிருக்கிறார்.

மோடியை ஜனநாயக சக்திகள் சாதிமத பேதமின்றி தொடர்ந்து விமர்சிக்கும் போதெல்லாம் வாய் திறக்காத இந்த யோக்கியர் இன்று தனது சமூகம் பற்றி விவாதத்தில் சொன்ன ஒரு வார்த்தைக்காக வலிந்து பேச வருகிறார். அவருக்கு தனது கட்சி மற்றும் பிரதமர் மேல் பற்று குறைவென்பதை அறிவோம்.)

பல கட்சி கண்டவர் அல்லவா?

தொடர்ந்து இந்துத்வா கும்பல்களால் இந்த நாட்டில் நடைபெறுகிற கொலைகள் குறித்து ஒரு வார்த்தை சொல்ல இவர்களுக்கு யோக்கியதை உண்டா?


English Summary
SV Searcher's lie: poet Salma