சென்னை:

தென்னக ரயில்வே பொங்கல் சிறப்பு ரயிலாக சுவிதா ரயிலை இயக்கி வருகிறது. இந்த ரயிலின் கட்டணம், ஆம்னி பேருந்து கட்டணங்களை விட  பல மடங்கு அதிகமாக இருப்பதாக பயணிகள் அதிர்ச்சி தெரிவித்து உள்ளனர்.

பொவாக பண்டிகை காலங்களில் வெளியூர் செல்லும் பயணிகள் கூட்டத்தை பொறுத்து, ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை நடைபெறுவது வாடிக்கை. ஆனால், மத்திய அரசு நிறுவன மான சுவிதா ரயிலிலும் இதுபோல அதிக அளவிலான கட்டணங்கள் நிர்ணயித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு 6 நாட்கள் தொடர் விடுமுறை இருப்பதால், பெரும்பாலான மற்ற மாநிலம் மற்றும் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்கு சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இதன் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை முதல் அனைத்து ரயில் நிலையங்கள், கோயம்பேடு உள்பட பல பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

குறைந்த கட்டணத்தை எதிர்பார்த்துள்ள ஏழை மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்ற னர். இதற்காக சிறப்பு ரயிலை எதிர்பார்த்து ரயில் நிலையங்களில் காத்துகிடக்கின்றனர்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு சுவிதா சிறப்பு ரயில் நேற்று இயக்கப்பட்டது. இந்த ரயிலில் படுக்கை வசதி யுள்  ஒரு டிக்கெட் ரூ.1,315, 3-ம் வகுப்பு ஏசியில் ஒரு டிக்கெட் ரூ.3,745,  2-ம் வகுப்பு ஏசியில் ஒரு டிக்கெட் ரூ.5,300 எனவும்  நிர்ணயிக்கப்பட்டிருந்தது.  இந்த கட்டணத்தை கேள்வியுற்ற சாதாரண, நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

பொதுவாக சுவிதா சிறப்பு ரயிலில் 2ஏசி, 3ஏசி, படுக்கை வசதி பெட்டிகளில் தலா 20 சதவீதம் என 5 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது இந்தகட்டணங்கள் வழக்கமாக உள்ள கட்டணத்தில் இருந்து, 3 மடங்கு அதிகமாக இருப்பதால் செந்த ஊடுக்கும் செல்ல விரும்பிய பயணிகள் அதை தவிர்த்தனர்.

இந்த கட்டண உயர்வானது… ஆம்னி பேருந்துகளின் கட்டண  கொள்ளையை விட அதிகமாக இருப்பதாகவே  பெரும்பாலான பயணிகள் குறை கூறினர்.

than ….!