சென்னை: அரக்கோணம் காட்பாடி இடையே மேம்பாலம் பாதிப்பு காரணமாக சென்னை ரயில்சேவை உள்பட 23 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
காட்பாடி அருகே ரயில்வே பொன்னையாற்றின் மேம்பாலத்தில் திடீரென ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக அநத வழியாக பயணிக்கும் இன்று 23 ரயில்கள் ரத்து செய்யப்பதுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அரக்கோணம் காட்டிப்பாடி இடையே வேலூர் மாவட்டம் திருவலத்தில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பது நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே பொறியாளர்கள், பாலம் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தினர். இதையடுத்து, உடனடியாக, அந்த வழியாக செல்லும் ரயில்கள் மாற்றுப்பாதையில், இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஜோலார்பேட்டை, சென்னை, வேலூர், பெங்களூரு, மைசூரு, மங்களூரு, கோவை, ரேணிகுண்டா, அரக்கோணம் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்று இரவு றப்பட்டு சென்ற ரயில்கள் மற்றொரு வழித்தடத்தில் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.
இதையடுத்து, பொன்னையாற்றில் உள்ள ஆங்கிலேயர்கால ரயில்வே மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. நாளை மங்களூரு-சென்னை, ஆலப்புழா-சென்னை,ரேணிகுண்டா-மைசூரு உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
