விரும்புகிறேன், 5 ஸ்டார், திருட்டுப் பயலே உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கியவர், சுசி கணேசன்.

திரைத்துறைக்கு வரும் முன் இதழாளராக பணிபுரிந்தவர். எழுத்தாளரும்கூட.

தினமணி கதிர் இதழில், இவர் எழுதிய வாக்கப்பட்ட பூமி, பல்லாயிரக்கணக்கான வாசகர்களை கவர்ந்தது.

இந்நிலையில், இன்று (05/03/2022) மாலை 5 மணிக்கு, சென்னை புத்தகக் கண்காட்சியில் தனது வாக்கப்பட்ட பூமி நூலை வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார் சுசி கணேசன்.

இந்நிகழ்வு , டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கு எண் F-44 இல் நடைபெற உள்ளது.