ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் விக்ராந்த், அதுல்யா ரவி, மிஷ்கின், சுசீந்திரன் ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் சுட்டுப் பிடிக்க உத்தரவு.

எதிர்பார்த்த வரவேற்பு இல்லையெனினும் முதல் வார முடிவில் சென்னையில் மட்டும் ரூ.19,81,953 வரையில் வசூல் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் மூலமே இயக்குனர் சுசீந்திரன் நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். தன்னை ஒரு நடிகராக சினிமாவில் அறிமுகம் செய்து வைத்த இயக்குனர் ராம் பிரகாஷ் ராயப்பாவிற்கு, இயக்குனரும், நடிகருமான சுசீந்திரன் தங்கச் சங்கிலியை பரிசாக அளித்துள்ளார் .