சென்னை: சூர்யா நடிப்பில் வெளியாகி உள்ள ஜெய்பீம் பட சர்ச்சை தொடர்ந்து வருகிறது. இந்த விவகாரத்தில் சூர்யா மன்னிப்பு கேட்க மறுத்து விட்ட நிலையில், பட இயக்குனர் ஞானவேல் வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால், அதை பாமக ஏற்காத நிலையில், பல பகுதிகளில் காவல் நிலையத்தில் புகார்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. இதனால் சர்ச்சை நீடித்து வருகிறது.
ஜெய்பீம் படம் இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட தகவலில், சில வினாடிகள் மட்டுமே ஓடும் அந்த காலண்டர் தங்கள் கவனத்தில் பதியவில்லை என்றும் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக கூறியிருந்தார். ஆனால், ஏற்க மறுத்து, பாமகவினபினர் தொடர்ந்து ஜெய்பீம் படக் குழு வினரையும் நடிகர் சூர்யாவைவும், குறிப்பாக இயக்குனர் ஞானவேலை கடுமையாகத் தாக்கிப் பேசி வருகின்றனர்.
இயக்குனர் ஞானவேல் பிரபல யுடியூபர் மாரிதாஸ் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், ஜெய்பீம் படத்தில் எந்தெந்த இடங்களில் அக்னி கலசம் காலண்டர் காட்சி வருகிறது என்பதை தொகுத்து, அதுகுறித்து அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய மாரிதாஸ், திட்ட மிட்டு ஒரு சமூகத்தை சாதி வெறியர்களால் கொடூரமாக காட்ட முயல்வது நியாயமா?. இதை தெரியாமல் நடந்துவிட்டது என்று கூறுவது வடி கட்டிய பொய் என கடுமையாக சாடியிருந்தார். இந்த வீடியோ வைரலானது.
இதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்த படத்தின் இயக்குனர் ஞானவேல், திடீரென தனது டுவிட்டர் பக்கத்தில் மாறுதலுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.. அதில், இது அயோக்கிய கும்பல்… -இப்படிக்கு மனிதருள் மாணிக்கம் மாரிதாஸ்.. அன்பான தமிழ் மக்களே.. யோக்கியன் வந்துட்டாரு . மறக்காம சொம்ப எடுத்து உள்ள வைங்க..” என ட்விட் செய்துள்ளார்.
இந்த பதிவு மீண்டும் சர்ச்சையாகி உள்ளது. இதற்கு பதிலடி கொடுத்து பிஜிலிவெடி ஞானவேல் என மீண்டும விமர்சித்து வீடியோ பதிவிட்டுள்ளார்.