நடிகர் சூர்யா நடிக்கவுள்ள 38வது படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.
சுதா கொங்காரா இயக்கி சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார்.