கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியில் இன்று காலை பிகில் திரைப்படம் வெளியிட தாமதமானதால் தியேட்டரில் வைக்கப்பட்ட பேனர்களை உடைத்து விஜய ரசிகர்கள் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கலவரத்தில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் 37 பேரை (புள்ளிங்கோ)  காவல்துறையினர் கவனித்து சிறையில் அடைந்து உள்ளனர்.

‘நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் இன்று அதிகாலை வெளியானது. தமிழகஅரசு, சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடையாது என்று நேற்று மாலை வரை அறிவித்து வந்த நிலையில், இரவு சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கி,,, தங்களது அறிவிப்பு அனைத்தும் வெத்துவேட்டு என்பதை நிரூபித்து காட்டியது.

இதன் காரணமாக பிகில் படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்படும் என நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. பிகில் படத்தின் முதல் காட்சிகளை காண விஜய் ரசிகர்கள் இரவு முதலே தியேட்டர் வாசல்களில் தவமிருந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை பல இடங்களில் பிகில் படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.

இந்த நிலையில், கிருஷ்ணகிரியில் படம் திரையிட தாமதமானால், விஜய் ரசிகர்களின் கலவரத்தில் ஈடுபட்டனர்.

அங்குள்ள ஐந்து ரோடு ரவுண்டானாவில் வைக்கப்பட்டிருந்த சிக்னல்கள் கண்காணிப்பு கேமராக்கள் போலீசாரின் ஒலிபெருக்கிகள், தீபாவளியை முன்னிட்டு போலீசார் அமைத்திருந்த கட்டைகளால் ஆனா உயர மேடை போன்றவற்றை உடைத்து அதகளப்படுத்தினார்.

ரவுண்டானாவில் நகராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி உடைக்கப்பட்டதுடன், தீபாவளியையொட்டி சாலையோர வியாபாரிகள் கடைகள் வைத்து பிழைப்பு நடத்திய பொருட்கள், பானைச் சட்டிகள் உடைத்து நொறுக்கப்பட்டன.  பல்வேறு கடைகளின் பேனர்கள் கிழித்தும், தீ வைத்தும்  எரிக்கப்பட்டன.

இதுகுறித்து தகவல் அறந்த காவல்துறையின்  அதிவிரைவு படை போலீசார் விரைந்து வந்து, பிகில் ரசிகர்கள் மீது தடியடி நடத்தி விரட்டியதுடன், முக்கிய புள்ளகிள் 37 பேரை தூக்கிச் சென்றனர். அவர்களுக்கு காவல்நிலை யத்தில் செமையான கவனிப்பு நடைபெற்றதாகவும், விசாரணையில், கலவரத்தில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் அனைவரும், ஓசூர் மற்றும் சூளகிரி பகுதியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

பிகில் ரசிகர்களின் வெறியாட்டம் அங்குள்ள பொதுமக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்திஉள்ளது.