விசாகப்பட்டணத்தில் நாளை 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கவுள்ளது. இப்போட்டி தொடர்பாக கோலி கூறியதாவது, ஆடுகளத்தின் பிட்சில் புற்கள் இருப்பதை தான் விரும்பவில்லை என்றார். மேலும், விசாகப்பட்டின மைதான பிட்ச் ஸ்பின்னர்களுக்கு உதவும் விதமாக இருப்பதால். அதே போன்ற பிட்சைத்தான் இப்போதும் எதிர்பார்ப்பதாகவும். நியூஸிலாந்துக்கு எதிராக இந்தப்பிட்சில் ஸ்பின்னர்கள் சில விக்கெட்டுகளைக் கைப்பற்றியதால் வேகமாக பந்து வீச்சுக்கு அந்த இடம் கொஞ்சம் உதவியாக இருக்கும். வெற்றிக்கும் வழி வகுக்கும் என்றார்.
மேலும், இந்தப் பிட்சில் ஸ்பின்னர்கள் பந்து வீச ஆர்வப்படுவார்கள் என்பதால், விளையாட்டிற்கு செல்லும் முன் அதேபோன்ற பிட்சைத்தான் எதிர்பார்த்துச்செல்கிறோம் என்றார். கடந்த ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின் போதே அங்குள்ள பிட்சில் அதிகமாக புற்கள் இருந்தது ஆச்சரியமாக ஏற்படுத்தியதாகவும் கூறினார்.