நடிகர் சூர்யா மீண்டும் இயக்குநர் பாலாவுடன் இணையவிருப்பதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

சூர்யாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை தந்தது பாலாவின் ‘நந்தா’ திரைப்படம் தான். தற்போது மீண்டும் இவர்கள் இணைகிறார்கள்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சூர்யா, “என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்… ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்.. 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்… அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்… அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்…” எனக் குறிப்பிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]