2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து தீபாவளி விருந்தாக வெளியான திரைப்படம் சூரரைப் போற்று.

அமேசான் ப்ரைமில் மீண்டும் மீண்டும் பார்த்து கொண்டாடி வருகின்றனர் சூர்யா ரசிகர்கள். படத்தின் பாடல் வீடியோக்களை ஒவ்வொன்றாக வெளியிட்டது படக்குழு.

இந்த படத்தின் மேக்கிங் வீடியோக்கள் சிலவற்றை படக்குழுவினர் வெளியிட்டு வந்தனர்.இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தன.

இந்நிலையில் சூர்யா நடித்த வலிமிகுந்த காட்சிகளை வெளியிட்டுள்ளது அமேசான் ப்ரைம் நிறுவனம். விமான நிலையத்தில் சூர்யா அழுது நடித்த காட்சியை பார்த்த ரசிகர்கள், சூர்யாவுக்கு தேசிய விருதே கிடைக்கும் என்று புகழாரம் சூட்டினர். அந்த அளவிற்கு காட்சிகளில் கச்சிதம் காண்பித்திருப்பார் சூர்யா.