சூர்யா பிறந்த நாளில் இன்ப அதிர்ச்சி.. முரட்டுதோற்றம், ரொமாண்டிக் மூட்..

Must read

டிகர் சூர்யா பிறந்த நாளான இன்று அவருக்கு ரகிகர்களும் செலப்ரட்டி களும் வாழ்த்துக்கள் குவித்து வருகின் றனர். சூரரைப்போற்று படத்திலிருந்து ’காட்டு பயலே..’என்ற ரொமாண்டிக் பாடலை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி யாக அளித்திருக்கிறது படக் குழு. சூர்யா, அபர்ணா முரளியின் காதல் சிலுமிசங்கள் கிக் ஏற்றுகின்றன. ’ரவுடி பேபி’ புகழ் தீ இதனை பாடியிருக் கிறார். கவிஞர் சினேகன் பாடல் எழுதி உள்ளார். சுதா கொங்கரா டைரக்டு செய்திருக்கிறார்.

 
இப்படம் கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு தியேட்டர் ரிலீசுக்காக காத்திருக்கிறது.
அடுத்து வெற்றிமாறன் இயக்கும் ’வாடி வாசல்’ படத்தில் சூர்யா நடிக்கிறார். இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் ஜல்லிக்கட்டு மாடு பிடி வீரராக நடிக்க உள்ளார். கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். படத்தின் பர்ஸ்ட் லுக்கை எஸ். தாணுவின் வி கிரியேஷன் வெளியிட்டிருக்கிறது. மாடு பிடி வீரர்போன்று முரட்டும் தோற்றத் தில் கெத்தாக இருக்கிறார் சூர்யா. இதனை தொடர்ந்து ஹரி இயக்கும் அருவா படத்தில் நடிக்க உள்ளார்.
 

More articles

Latest article