டில்லி

ர்ஜிகல் ஸ்டிரைக்கை நடத்திய முன்னாள் ராணுவ ஜெனரல் ஹூடா பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

 

கடந்த 2016 ஆம் வருடம் நடந்த சர்ஜிகல் ஸ்டிரைக்கை முன்னின்று நடத்தியவர் முன்னாள் ராணுவ அதிகாரி லெப்டினெண்ட் ஜெனரல் டி எஸ் ஹூடா ஆவார்.  இவர் தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தேசிய பாதுகாப்பு குறித்து அறிக்கை ஒன்றை அளித்துள்ளார்.  அதில் அவர் சர்ஜிகல் ஸ்டிரைக் குறித்த முழு விவரத்தையும் தெரிவித்துள்ளார்.

செய்தி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் டி எஸ் ஹூடா, “இந்தியாவில் தேசிய பாதுகாப்புக் கொள்கை என எதுவும் எழுத்து வடிவில் கிடையது.   ஆனால் நமக்கு அரசு மற்றும் ராணுவம் சீராக நடக்க அவ்வாறு ஒரு கொள்கை எழுத்து வடிவத்தில் தேவைப்படுகிறது.   எனவே நான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் இது குறித்து ஒரு அறிக்கை தயார் செய்ய உள்ளதாக தெரிவித்தேன்.

ராகுல் அதற்கு ஒப்புதல் அளிக்கவே நான் இது குறித்து பொதுவான விவாதம் மற்றும் ஆலோசனையை அடுத்து ஆட்சிக்கும் வரும் அரசு நடத்த வேண்டும் என விரும்பினேன்.  ஆகவே இது குறித்த விவரங்களை அவரிடம் அளித்துள்ளேன்.   இந்த அறிக்கையில் நான் முக்கியமாக தேசிய பாதுகாப்பு கொள்கையின் ஐந்து அம்சங்கள் குறித்து விவரித்துள்ளேன்.

முதலில் உலக விவகாரங்களில் இந்தியாவின் நிலை பற்றி குறிப்பிட்டுள்ளேன்.  நமக்கு அமெரிக்கா உள்ளிட்ட வலுவான நாடுகளுடன் நல்ல தொடர்புள்ளதால் உலக விவகாரங்களில்  நமது நிலை முக்கியமானதாகும்.  அடுத்தது நமது பகுதியின் பாதுகாப்பு வருகிறது.  நாம் பாகிஸ்தான் மற்றும் சீனா மட்டுமின்றி அனைத்து நாடுகளுடனும் நடந்துக் கொள்ளும் விதம் குறித்ததாகும்.

மூன்றாவது நமது உள்நாட்டு போர்கள்.  இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது காஷ்மீர் விவகாரம், வடகிழக்கு கிளர்ச்சிகள், இடது சாரி மற்றும் வெளிநாட்டு தீவிரவாதம் ஆகியவை ஆகும்.  நான்காவது மகக்ளின் பாதுகாப்பு.  மக்கள் முழு பாதுகாப்புடன் இருப்பதை அவர்களே உணரும்படி நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.

கடைசியாக மேலே குறிப்பிட்ட அனைத்தையும் நாம் பெற வேண்டுமெனில் நமது திறமைகளை அதிகரிப்பதாகும்.   இதில் நாம் எல்லைப் பாதுகாப்பு, ராணுவ திறன், மக்களின் புனரமைப்பு, சைபர் கிரைம், அணுசக்தி, விண்வெளி மற்றும் தொடர்புத் துறை ஆகியவகளை மேம்படுத்துவதை கவனிக்க வேண்டும்.

புல்வாமா மற்றும் பாலகோட் தாக்குதல்கள் நமது தேச பாதுகாப்புக்கு ஒரு சவால் என்பதை மறுக்க முடியாது.   ஆகவே தேசப் பாதுகாப்பு முக்கியமானது.   ஆனால் நமது தேசப் பாதுகாப்பு என்பது பாகிஸ்தான் நடத்தும் தீவிரவாதத்தை மட்டுமே குறி பார்க்கக் கூடாது.  நமது மக்களின் தேவை என்ன என்பதையும் அவர்களின் விருப்பத்தையும் தெரிந்துக் கொள்ள வேண்டும்.   அவற்றை மையமாகக் கொண்டே தீவிரவாத நடவ்டிக்கைஅக்ள் நடைபெறுகின்றன.

மக்களாட்சியில் அனைத்து துறைகளும் முக்கியமானவைகள் ஆகும்.  எனவே யாரும் என்னை கேள்வி கேட்கக் கூடாது என்னும் குறுகிய மனப்பான்மை சரி அல்ல.   அதற்காக ஒவ்வொன்றுக்கும் கேள்வி எழுப்புவதும் சரி இல்லை.  நான் இதற்கு ஒரு சரியான அளவை பின்பற்ற வேண்டும்.

காஷ்மீர் மாநிலத்தில் உரியில் நடந்த தாக்குதலுக்கு பிறகு நாட்டின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்தன.   நாம் பெரிய தீவிரவாத தாக்குதலை சமாளிக்கும் அளவுக்கும் திறமையுடன் இருக்கிறோமா எனவும் வினாக்கள் வந்தன.  அதற்காக நாம் 2016 ஆம் வருடம் நமது திறமையை உறுதி படுத்த் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தினோம்.   இதன் மூலம் நமது திறமையை உறுதி செய்தோம்.

இதனால் நாம் பல வீரர்களை இழந்தோம்.   ஆயினும் பயங்கரவாதம் முழுமையாக அழிக்கப்படவில்லை.  சர்ஜிகல் ஸ்டிரைக் மூலம் தீவிரவாதமோ பயங்கர வாதமோ முழுமையாக அழிக்கப்பட முடியாது.  எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு ஒரு சிறிய இடைவெளி இதனால் கிடைத்தது என கூறலாம்.” என தெரிவித்துள்ளார்.