மீண்டும் ஷங்கருடன் இணையும் பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி….!

Must read

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கவுள்ள படத்தை தில் ராஜு தயாரிக்கவுள்ளார்.

இந்தப் படத்தைத் தெலுங்குத் திரையுலகின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும் 50-வது படமாக இது உருவாகிறது. இந்தப் படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார்.

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. இது ராம் சரணின் 15-வது படமாகவும்.

இப்படத்திற்கான வேலைகளை முழுவீச்சில் செய்து வருகிறார் ஷங்கர்.

ராம்சரண் படத்தின் பாடல்களுக்கு நடன இயக்குநராக ஜானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் படத்துக்கு யார் இசையமைப்பார்கள் என்ற கேள்வி இருந்தது. அனிருத், தமன் என இரு பெயர்கள் அடிபட்டன. இதில் தமனை பாய்ஸ் படத்தில் நடிகராக அறிமுகப்படுத்தியவர் ஷங்கர்.

அனிருத்தா, தமன்-னா என்ற போட்டியில் ஜாக்பாட் அடித்தது தமனுக்கு. ஷங்கர் – ராம் சரண் படத்துக்கு தமனை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இப்படத்தின் கதாநாயகியாக கியாரா அத்வானி இணைந்திருக்கிறார்.

இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘ஐ’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். ‘ராம் சரண் 15’ படத்திலும் வில்லனாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

More articles

Latest article