சூரத் :
பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மீது சூரத் கோட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்கு இன்று ராகுல்காந்தி ஆஜரானார்.
நடைபெற்ற முடிந்த முடிந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது, திருடர்கள் அனைவரும் மோடி பெயரிலேயே உள்ளனர் என்று விமர்சித்து இருந்தார்.
ராகுல் பேச்சு குறித்து குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் நேரில் ஆஜராக கோரி நீதிமன்றம் ஏற்கனவே சம்மன் அனுப்பியது. ஆனால், அப்போது ஆஜராகாத நிலையில், இன்று கண்டிப்பாக (அக்டோபர் 10ந்தேதி) ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, இன்று சூரத் சென்ற ராகுல்காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து, சூரத் கோர்ட்டின் விசாரணைக்கு ராகுல் ஆஜரானார்.
இதைத்தொடர்ந்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
முன்னதாக, கோர்ட்டில் ஆஜர் ஆவது குறித்து டிவிட் பதிவிட்டுள்ள ராகுல்,
என் அரசியல் எதிரிகளால் என் மீது சுமத்தப்பட்ட அவதூறு வழக்கில் ஆஜராக நான் இன்று சூரத்தில் இருக்கிறேன், என்னை மவுனமாக ஆசைப்படுகிறேன். என்னுடன் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த இங்கு கூடியிருந்த காங்கிரஸ் தொண்டர்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நான் கடமைப்பட்டி ருக்கிறேன்.
சத்யமேவ் ஜெயதே என்று தெரிவித்து உள்ளார்