சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு புகார் குறித்து விசாரண நடத்த அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு, இன்று தமிழக முதல்வரிடம் விசாரணை அறிக்கையை சமர்பித்தது.
பணி நியமன முறைகேடு தொடர்பாக அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா மீதான ஏராளமான புகார்கள் குவிந்தன.பணி நியமனம் செய்ததில் சுமார் 250 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.இதையடுத்து, அதுகுறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு அமைத்து தமிழகஅரசு உத்தரவிட்டது.
இந்த குழுவினர் கடந்த அக்டோபர் மாதம் முதல் விசாரணையை தொடங்கியது. பலரிடம் விசாரணை நடத்தியது. அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள், பதிவாளர் உள்ளிட்டோரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் குற்றச்சாட்டுக்கு ஆளான சூரப்பாவிடமும் விளக்கம் கேட்டு பெறப்பட்ட நிலையில், விசாரணை அறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.