சென்னை:

ண்ணா பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் நியமனம் செய்யப்பட்டிருப்பதற்கும், எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

அமைச்சரின் பொறுப்பற்ற  பதில் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கர்நாடகாவை சேர்ந்த சூரப்பாவை கவர்னர் பன்வாரிலால் நியமனம் செய்துள்ளார்.

இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் சூரப்பா

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதில் பதில் அளித்து பேசிய அமைச்சர், நாட்டிலேயே அறிவுசார் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது என்றும்,  ஆளுநர் தனது அதிகாரத்துக்குட்பட்டு துணைவேந்தரை நியமித்துள்ளார்; இதில் அரசுக்கு எந்த சம்பந்தமில்லை என்று பொறுப்பற்ற முறையில் பதில் அளித்தார்.

மேலும், தமிழகத்தில் உள்ள கல்வியாளர்களை குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும், காவிமயத்திற்கு இங்கு  வேலையில்லை  என்றும் கூறினார்.

ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்,  ஐபிஎல் போட்டியை நடத்துவது மாநில அரசு அல்ல, பாதுகாப்பு அளிப்பது மட்டும் தான் தமிழக அரசின் கடமை என்றும், சென்னையில் கிரிக்கெட் பேட்டி நடத்துவது குறித்து பிசிசிஐ தான் முடிவு செய்யும் என்று கூறினார்.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள பிரபலமான அண்ண யுனிவர்சிட்டிக்கு கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா என்பவர் நியமனம் செய்யப்பட்டிருப்பதற்கும், தமிழக அரசுக்கும் சம்பந்தமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் பொறுப்பற்ற முறையில் பேசியது தமிழக மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாநில அமைச்சரே, ஒரு அரசு கல்வி நிறுவனத்திற்கு தலைவர் நியமனம் செய்வதில் சம்பந்தம் இல்லை என்று கூறியது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மாநில அரசு இருக்கிறதா…. என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.