சென்னை: சூரப்பா மீதான முறைகேடு தொடர்பாக விசாரணை ஆணைய அறிக்கை நகலை, சூரப்பாவுக்கு வழங்க லாமா என்பது குறித்து பதில் அளிக்க தமிழகஅரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான ஆணையம் அமைத்து கடந்த அதிமுக அரசு விசாரணை நடத்தியது. இந்த விசாரணை ஆணையத்தின் அறிக்கை தமிழகஅரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், விசாரணை ஆணையத்துக்கு எதிராக சூரப்பா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. கடந்த விசாரணையின்போது, சூரப்பா விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து தமிழக ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வாதங்களைத் தொடர்ந்து, சூரப்பா தரப்பின் கோரிக் கையை ஏற்று, விசாரணை ஆணையத்தின் அறிக்கை நகலை சூரப்பாவுக்கு வழங்கலாமா என விளக்கமளிக்க தமிழக அரசு தலைமை வழக்கறிஞருக்கு நீதிமன்றம் உத்தரடிவிட்டு வழக்கை ஜனவரி 10ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.