டெல்லி

என்எக்ஸ் மீடியா  வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமின் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், இது தொடர்பாக சிபிஐ பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 15ந்தேதி ஒத்தி வைத்ததுள்ளது.

ஜாமின் மனுவில், சிதபரத்தின் எடை 4 கிலோ குறைந்து விட்டது என்ற புலம்பலை ஏற்காமல், விசாரணையை உச்சநீதி மன்றம் ஒத்தி வைத்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடிய முறைகேடு வழக்கில் சிபிஐ அதிகாரிகளால்,  கடந்த ஆகஸ்டு மாதம் 21-ம் தேதி முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது காவல் தொடர்ந்து சிபிஐ நீதிமன்றத்தால் நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், ஜாமின் கோரி உச்சநீதி மன்றத்தில் நேற்று அவசர மனு தாக்கல் செய்தார்.

ப.சிதம்பரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு ஏற்கக் கோரி நேற்று உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் என்.வி. ரமணா, சஞ்சீவ் கண்ணா, கிருஷ்ணா முராரி ஆகியோர் கொண்ட அமர்விடம் வலியுறுத்தினார். ஆனால், இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகயிடம் அனுப்பப்படும். அவர் ஒதுக்கீடு செய்வார் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால், மனுவை உடனே விசாரிக்க மறுத்த உச்சநீதி மன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர் பானுமதி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அமர்வில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.  மனுவை விசாரித்த நீதிபதிகள், மனு தொடர்பாக சிபிஐ பதில் அளிக்கக்கோரி உத்தரவிட்டு வழக்கை 15ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இன்றைய உச்சநீதி மன்ற விசாரணையின்போது சிதம்பரத்துக்கு ஜாமின் கிடைத்து விடும் என எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், வழக்கின் விசாரணையை உச்சநீதி மன்றம் ஒத்தி வைத்துள்ளது

“சிதம்பரத்தின்  உடல்நிலை பலவீனமாக உள்ளது. அவரை  சிறையில் அடைத்து  வைத்து, அவருக்குப் பழக்க மில்லாத உணவை சிறை அதிகாரிகள் வழங்கியுள்ளார். அவர் ஏற்கனவே 4 கிலோவை இழந்துவிட்டார் என ஜாமின் மனுவில் கூறப்பட்டிருந்த நிலையில்,  உச்சநீதி மன்றம் அதை கண்டுகொள்ளாமல் வழக்கை ஒத்தி வைத்துள்ளதால், சிதம்பரத்தின் சிறைவாசம் மேலும் தொடர்கிறது.