டில்லி:
தனி மனித சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை என்று உச்சநீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு உத்தரவிட்டிருப்பது மோடி அரசுக்கு பின்னடைவு என்று முகில் ரோஹத்கி தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அரசு வக்கீலான இவர் மேலும் கூறுகையில், ‘‘ நான் இன்னும் அந்த பதவியில் தொடர் ந்திருந்தால் இந்த தீர்ப்பு எனக்கு கிடைத்த தோல்வி என்று தான் கூறுவேன். வக்கீல் என்ற முறையில் இந்த வழக்கில் நாங்கள் வெற்றி பெறவில்லை.
1954ம் ஆண்டு 8 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்ட தனி மனித சுதந்திரம் அடிப்படை உரிமை இல்லை என்ற தீர்ப்புக்கு எதிராக தற்போது புதிய உத்தரவு வந்துள்ளது. இதன் மூலம் ஆதார் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை. இப்படி இருக்கையில் எப்படி வெற்றி என்று கூற முடியும்’’ என்றார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,‘‘ தனி மனித சுதந்திரம் அடிப்படை உரிமையா? இல்லையா? என்பதை நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். அதனால் நீதிமன்றத்தின் உத்தரவை மத்திய அரசு ஜீரணித்துக் கொள்ள முடியாது.
நாடாளுமன்ற செயல்பாட்டை உச்சநீதிமன்றம் கையில் எடுத்துள்ளது. அதனால் பிரச்னைக்கு திருப்தி அளிக்காத தீர்வு ஏற்பட்டுள்ளது. மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இந்த தீர்ப்பு தொடர்பாக உண்மையான கருத்துக்களை தெரிவிக்கவில்லை’’ என்றார்.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மத்திய சட்ட அ¬ம்சர் ரவிசங்கர பிரசாத் வரவேற்று கருத்து தெரிவித்திரு ந்தார். அவர் கூறுகையில்,‘‘ மத்திய அரசு இந்த தீர்ப்பை வரவேற்கிறது. ஆதார் தொடர்பான இந்த விவகாரத்தில் அரசும் இந்த நிலைப்பாட்டில் தான் இருந்தது. எனினும் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்’’ என்றார்.
கடந்த மாதம் 27ம் தேதி மத்திய அரசு வக்கீல் வேணுகோபால், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு தனி மனித சுதந்திரம் அடிப்படை உரிமை கிடையாது என்று தெரிவித்திருந்தார்.
[youtube-feed feed=1]