டெல்லி:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள பாதாள அறை மீதான வழக்கில்,  பத்மநாப சுவாமி கோவில் மீது மன்னர் குடும்பத்திற்கு உரிமை உள்ளது என உச்சநீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

இது தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், 9 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
மேலும், பத்மநாப சுவாமி கோயில் நிர்வாகத்தை மேற்பார்வையிட இடைக்கால குழு அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
அதன்படி,  பத்மநாபசாமி கோயிலின் புதிய குழுவில் மாவட்ட நீதிமன்ற நீதிபதி தலைமையில் 5 உறுப்பினர்கள் இருப்பார்கள் என்றும், கோயில் தலைமை பூசாரி மற்றும் அரச குடும்பம், மத்திய மற்றும் மாநில அரசாங்கத்தைச் சேர்ந்த தலா ஒரு பிரதிநிதி உறுப்பினர்களாக இருப்பார்கள். குழுவில் இந்து அல்லாதவர்களை நியமிக்க முடியாது என்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.