டெல்லி:

என்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தின் ஜாமின் மனு மீதான விசாரணை ஏற்கனவே முடிவடைந்த நிலையில், இன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்குகிறது. அவருக்கு ஜாமின் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக நம்பப்படுகிறது.

ஐஎன்எக்1 மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக, கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்ததலைவருமான  ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.  முதலில் சிபிஐ கைது செய்த நிலையில், பின்னர் அமலாக்கத்துறை  கைது அக்டோபர்  16ந்தேதி கைது செய்தது.

சிபிஐ கைது செய்யப்பட்ட வழக்கில் சிதம்பரத்தக்கு உச்சநீதி மன்றம் ஏற்கனவே ஜாமின் வழங்கியுள்ள நிலையில், அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில், ஜாமின் கோரிய சிதம்பரத்தின்  மேல்முறையீட்டு மனு கடந்த சில நாட்களாக உச்சநீதி மன்றத்தில் விசாரணை நடைபெற்றது. கடந்த வாரம் நடைபெற்ற இறுதி விசாரணையைத் தொடர்ந்து தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.

இந்த நிலையில் இன்று அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில், உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்குகிறது.