டில்லி:

கில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்தியின் குடியுரிமை குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இதுதொடர்பாக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், கோடை விடுமுறைக்கு பிறகு விசாரணை நடைபெறும் என அறிவித்து உள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குடியுரிமை தொடர்பாக அமேதி தொகுதி பாஜக வேட்பாளர் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்திருந்தார். அதில் ராகுல் இந்திய மற்றும் பிரிட்டன் குடியுரிமை பெற்றுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த  விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், தேர்தல் ஆணையம் அதை நிராகரித்து விட்டது. ஆனால்,  மத்திய உள்துறை அமைச்சகம்  ராகுலுக்கு விளக்கம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இரண்டு பேர் வழக்கு தொடுத்து இருக்கிறார்கள். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய குடிமகன் கிடையாது, அதனால் அவர் தேர்தலில் போட்டியிட கூடாது என்று வழக்கு தொடுத்துள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணை கோடை விடுமுறைக்கு பின்பு ஜூன் மாதத்தில் விசாரிக்கப்படும் என உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது.

ஏற்கனவே ராகுல் குடியுரிமை தொடர்பாக  2015ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.