டில்லி:

யோத்தி சர்ச்சைக்குரிய  நிலத்திற்கு  உரிமை கோரி தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், மத்தியஸ்தர்கள் குழு அமைத்தது விசாரணை நடத்தியது உச்சநீதிமன்றம். தற்போது  அதற்கான அவகாசம் முடிவடைந்த நிலையில், நாளை முதல் (வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரணையை தொடங்குவதாக அறிவித்து உள்ளது.

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி  விவகாரம் தொடர்பான  மேல்முறையீடு வழக்குகள்  உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம்  26-ம் தேதி நடைபெற்ற  விசாரணையின்போது,  அயோத்தி நில உரிமை தொடர்பாக சுமூக முறையில் தீர்வு காணும் வகையில்  மத்தியஸ்தர்கள் குழுவை அமைத்தது. அதைத்தொடர்ந்து,  முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி எம்.எம்.ஐ. கலிபுல்லா தலைமையில், வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர்,  மற்றும் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு 8 வாரங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது.

அவர்களும் அயோத்தி சென்று  சம்பந்தப்பட்ட அமைப்பினருடன் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், தற்போது 6 வார காலம் முடிவடைந்த நிலையில், நாளை முதல் உச்சநீதி மன்றத்தில் விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள  செய்தி குறிப்பில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணையை மேற்கொள்ளுமென கூறப்பட்டுள்ளது.

இந்த அமர்வில் தலைமை நீதிபதியுடன், நீதிபதிகள் பாப்டே, சந்திரசூட், அசோக் பூஷன், அப்துல் நாசர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.