டெல்லி: தமிழ்நாடு டி.ஜி.பி. நியமனம் விவகாரம் இழுபறியாகும் நிலையில்,  3 வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்  அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் நிரந்தர டிஜிபி இதுவரை நியமனம் செய்யப்படாத நிலையில், உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, யுபிஎஸ்சி பரிந்துரைத்த டிஜிபியை  ஏற்க தமிழ்நாடு அரசு மறுத்து வருகிறது. இதனால், டிஜிபி நியமனத்தில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்த நிலையில்,  தமிழ்நாட்டில்  டி.ஜி.பி. நியமனம் விவகாரத்தில், முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி,  நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு  தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுவில், அந்த மனுவில் யு.பி.எஸ்.சி. பரிந்துரை அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை இயக்குநரை நியமிக்க தமிழ்நாடு அரச  தவறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்,   மனுவுக்கு 3 வாரத்தில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முன்னதாக,  தமிழக டி.ஜி.பி. ஆக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு பிறகு முழு நேர டி.ஜி.பி. ஆக யாரும் தேர்வு செய்யப்படாததால் சட்டம் ஒழுங்கு பிரிவு பொறுப்பு டி.ஜி.பி.-யாகவும் மாநில காவல் படைத்தலைவராகவும் டி.ஜி.பி. நிலையிலான ஐபிஎஸ் உயர் அதிகாரி ஜி. வெங்கட்ராமனை தமிழக அரசு ஆகஸ்ட் 31-ஆம் தேதி தற்காலிகமாக நியமித்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற விசாரணையின்போதுர, தமிழ்நாடு அரசு டிஜிபி பட்டியலை அனுப்பவில்லை என யுபிஎஸ்சி குற்றம் சாட்டியது. இதையடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மாநில அரசு, யு.பி.எஸ்.சி.-க்கு   பட்டியலை அளிக்க உத்தரவிட்டது. இதில், தற்போதைய தற்காலிக  வெங்கட்ராமனின் பெயரும் இடம் பெற்றுள்ளது. ஆனால், அவரை விட மூத்த அதிகாரிகள் பட்டியலில் இருப்பதால் அவர் நீங்கலாக வேறு சிலரது பெயர்களை யு.பி.எஸ்.சி. பரிந்துரைத்தது.

ஆனால், அந்த பட்டியலை ஏற்க தமிழ்நாடு அரசு மறுத்துவிட்டது. இதனால், டிஜிபி நியமன விவகாரத்தில் முட்டுக்கட்டை நீடித்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.