நெட்டிசன்:

Chandra Barathi முகநூல் பதிவு….. 

அமமுக வேட்பாளர்கள் சுயேட்ச்சைகளாகக் கருதப்படுவார்கள் என்றால் சுயேட்ச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டியிருக்கும்.

சுயேட்ச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தால் 10 பேர் தக்க ஆவணங்களோடு முன் மொழிய வேண்டும்.

ஏற்கனவே விஷால் ஆர். கே. நகர் தேர்தலில் சுயேட்ச்சையாக மனு செய்த போது முன் மொழிந்தவர் பின் வாங்கியதால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது கவனிக்கத் தக்கது…

தேர்தல் வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படும் போது அமமுக சுயேட்சை வேட்பாளர்கள் சந்திக்க இருக்கும் பெரும் சவாலாக இது இருக்கப் போகிறது..

சில முக்கிய தொகுதிகளில் பலம் வாய்ந்த சுயேட்சைகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்…

தேர்தல் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டால் உடனடியான சட்ட நிவாரணம் கிடைக்காது…

தேர்தல் வழக்குப் பதிவு செய்து தான் தீர்வு பெற முடியும்…

தேர்தல் வழக்குகளில் தீர்வு பல ஆண்டுகள் கழித்தே விசாரணைக்கும் தீர்வுக்கும் வரும் என்பது அனைவரும் அறிந்ததே….

உச்ச நீதிமன்ற தீர்ப்பு சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தினகரனுக்குப் பின்னடைவே…