டில்லி:

வாக்கு எண்ணிக்கையின்போது, எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுக் களுடன், விவிபாட் இயந்திரத்தில் பதிவான வாக்குகளையும் குறைந்த பட்சம் 50 சதவிகிதமாவது  ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று  21 எதிர்க்கட்சிகள் சார்பில் உச்சநீதி மன்றத்தில்  தொடரப்பட்ட மேல்முறையீடு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

விசாரணையின்போது தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்று, 21 கட்சிகளின் மனுவை தள்ளுபடி செய்வதாக உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பல இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் கோளாறு செய்ததால் பிரச்சினைகள் ஏற்பட்டன. மேலும் வாக்குகள் மாறி விழுவதாகவும் புகார் கூறப்பட்டது. இதையடுத்து, வாக்குப்பதிவு இயந்திரத்தின் வாக்குகளையும், விவிபாட் இயந்திரங்களில் பதிவான வாக்குச்சீட்டையும் எண்ண வேண்டும் என்றும், குறைந்த பட்சம் 50 சதவிகிதமாவது விவிபாட் இயந்திரங்களில் பதிவான வாக்குச்சீட்டுடன் எண்ண வேண்டும்  திமுக உள்பட 21 கட்சிகள் சார்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டன. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்ததது. அப்போது தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதி மன்றம், 21 கட்சிகளின் மனுவையும் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டது.