சென்னை: ஓய்வுபெற்ற சிலை கடத்தல்துறை ஐஜி பொன்.மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறப்பு தெரிவித்துள்ளது. இதனால், அவர்மீதான விசாரணை நடத்த பச்சைக்கொடி காட்டி உள்ளது.
தமிழ்நாட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்து, ஏராளமான சிலைகளை மீட்ட பெருமைக்குரியவர் பொன். மாணிக்கவேல். இவர் சென்னை உயர்நீதி மன்றம்தான் இந்த பணிக்காக நியமித்தது. பின்னர் அவர் பணி ஒய்வு பெற்ற நிலையில், மேலும் ஓராண்டு அவரது பணியை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்க அப்போதைய அதிமுக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றமும், அவரது பணி நீட்டிப்புக்கு ஒத்துழைக்க மறுத்தது.
இந்த நிலையில், ஓய்வுபெற்ற நிலையில், அவர்மீது முன்னாள் அதிகாரி ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அவர்மீது சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபரித உத்தரவிட்டார். இதை எதிர்த்து பொன்மாணிக்கவேல் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்சநிதிமன்ற நீதிபதி கிருஷ்ணா முராரி தலைமையிலான அமர்வு ‘பொன்மாணிக்க வேல் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. மேலும், மேல்முறையீட்டு மனு தொடர்பாக 3 வாரத்திற்குள் பதில் அளிக்க தமிழ்நாடு அரசு, சிபிஐ, எதிர் மனுதாரர் காதர் பாட்ஷாவுக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கும் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பாக தமிழக அரசு மற்றும் சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்ட தாக தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
அப்போது குறுக்கிட்ட பொன். மாணிக்கவேல் தரப்பு மூத்த வழக்கறிஞர் நாகமுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரைக்கும் சிபிஐ விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கு தடைவிதிக்க முடியாது என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.