டிக் டாக் செயலி மீதான தடை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

டில்லி:

டிக் டாக் செயலிக்கு தடை விதித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதி மன்றத்தின் தடையை  நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. வழக்கின் விசாரணையை 22ந்தேதிக்கு ஒத்தி வைத்தது.

சமூக சீரழிவை ஏற்படுத்தி வரும் டிக்டாக் செயலிக்கு தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை களை வலுத்ததை தொடர்ந்து, மதுரை உயர்நீதி மன்றம் டிக்டாக் செயலிக்கு தடை விதித்தும், இதுகுறித்து மத்தியஅரசு முடிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து,  சீன நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், டிக்-டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்பு தெரிவித்ததுடன், வழக்கு விசாரணையை வருகிற 22-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

பாடல்கள் பாட விரும்புபவர்களின் திறமையை ஊக்கப்படுத்தும் வகையில் ஸ்மார்ட் போன்களில்  டிக்டாக் எனப்படும் மியூசிக்கல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு இளைஞர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் அமோக வரவேற்பு கிடைத்து.

இந்த செயலி மூலம் இளைஞர்கள், இளைஞிகள்  மற்றுமின்றி சிறுவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வருகிறார்கள். நாளடைவில் இந்த செயலி தவறான செயலுக்கு உபயோகப்படுத்தப்பட்டு வந்தது.  ஒருசிலரின்  வக்கிர சிந்தனை காரணமாக,  பாட்டு பாடுவதாக கூறின, அவறுவறுப்பான அங்க அசைவுகளையும், பெண்கள் பதிவிடும் வீடியோக்களை சிலர் மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிடுவதால்,  தற்கொலை, உயிரிழப்புகள் ஏற்படும் நிலையும் உருவாகியது. நேற்றுகூட டில்லியில் டிக்டாக் செயலி மூலம் துப்பாக்கியுடன் வீடியோ எடுத்த இளைஞர்களில் ஒருவர்மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து மரணம் அடைந்தார்.

டிக்டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்று பல நாடுகளில் கோரிக்கை எழுந்தது. ஏற்கனவே  இந்தோனேசியாவில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இளைஞர்களின் நலன் கருதி டிக் டாக் செயலியைத் தடை செய்ய வேண்டும் என்று தமிழகத்திலும் குரல் எழுந்தது.

இதுதொடர்பான வழக்கின் விசாரணையை தொடர்ந்து, நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் ஆகியோர் அடங்கியிய அமர்வு, பிராங்க் ஷோ எனப்படும் குறும்பு வீடியோக்கள் எடுக்கவும், வெளியிடவும் தடை விதித்து உத்தரவிட்டனர். அத்துடன், டிக் டாக் செயலியைத் தடை செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், புளூவேல் போன்ற ஆபத்தான விளையாட்டுகளை நீதிமன்றம் தலையிட்ட பின்னரே மத்திய அரசு தடை செய்தது. அதுபோல சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒவ்வொரு நிகழ்வுக் கும் நீதிமன்றமே தடை விதிக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. அரசே முன்வந்து உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இதை எதிர்த்து சீன நிறுவனம் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்புக்கு உச்ச நீதி மன்றம் தடை விதிக்க மறுத்து விட்டது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Highcourt order, Supreme Court refuses, Tiktok banned
-=-