டெல்லி: தேர்தலில் ஒரே பெயரில் போட்டியிடுவதை தடுக்க முடியாது என பொதுநல வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு  தெரிவித்து விட்டது. இதையடுத்து மனு வாபஸ் பெறப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் சாபு ஸ்டீபன் தாக்கல் செய்த மனுவில், தேர்தலில் ஒரே பெயரில் பலரை வேட்பாளர்களாக நிறுத்தும் நடைமுறை தவறானது. இது, வாக்காளர்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான பழைய தந்திரம். ஒவ்வொரு வாக்குக்கும் ஒரு வேட்பாளரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அதிகாரம் உள்ளது. இந்த சூழ்நிலையில் அத்தகைய நடைமுறை போர்க்கால அடிப்படையில் கட்டுப்படுத்தப்பட வேண்டும். எனவே மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 மற்றும் தேர்தல் விதிகள் 1961-ல் உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

மேலும், தேர்தல் நடத்தை விதிகள், 1961 விதி 22(3) ஐக் குறிப்பிட்டு, இந்த பிரச்சினை “மிகவும் தீவிரமானது” என்றார். ‘இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வேட்பாளர்கள் ஒரே பெயரைக் கொண்டிருந்தால், அவர்கள் தங்களுடைய தொழில் அல்லது வசிப்பிடத்தைச் சேர்ப்பதன் மூலம் அல்லது வேறு வழிகளில் வேறுபடுத்திக் காட்டப்படுவார்கள்’ என்று விதி கூறுகிறது. மேலும், “ஒவ்வொரு வாக்குக்கும்” ஒரு வேட்பாளரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அதிகாரம் இருப்பதால், அத்தகைய நடைமுறை போர்க்கால அடிப்படையில் குறைக்கப்பட வேண்டும்.

“எனவே, ‘குழப்பம்’ ‘தெளிவு’ மூலம் மாற்றப்பட வேண்டும் என்பது காலத்தின் தேவை, இது சரியான திருத்தம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 மற்றும் தேர்தல் நடத்தை விதிகள், 1961 ஆகியவற்றில் திருத்தங்கள் மூலம் அடைய முடியும். மேலும், இது ஆரோக்கியமற்ற மற்றும் சீர்கெட்ட ஜனநாயக நடைமுறையாகும்” என்று  கூறப்பட்டுள்ளது.

மேலும்,   ‘பெயர்’ வேட்பாளர்களுக்கு இந்தியாவில் அரசியல் புரிதல் இல்லாமல் இருக்கலாம், பணம் மற்றும் பிற சலுகைகளுடன் போட்டி கட்சிகளால் நிதியுதவி செய்யப்படுகிறது. உண்மையான பங்கேற்பு இல்லாததால் அவர்கள் ‘பெயர்’ வேட்பாளர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். “இருப்பினும், மனுதாரர் அனைத்து சுயேச்சை வேட்பாளர்களும் போலியானவர்கள் என்று கூறவில்லை அல்லது அந்த வேட்பாளர்களுக்கு போட்டியிட உரிமை இல்லை என்று கூறவில்லை. இருப்பினும், பெயர் குறிப்பிடப்பட்ட வேட்பாளர்களைத் தவிர்ப்பதற்கு ஒரு பயனுள்ள ஆய்வு மற்றும் பொருத்தமான வழிமுறை இருக்க வேண்டும். மணி” என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த மனுமீது உச்சநீதிமன்ற  நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சதீஷ் சந்திர சர்மா, சந்தீப் மேத்தா அமர்வு  விசாரணை நடத்தியது, தொடர்ந்த ஒரே  “பெயரிடப்பட்ட” வேட்பாளர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணும் வழக்கை  விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.  இந்த மனுவை விசாரிப்பதில் தயக்கம் காட்டியதை அடுத்து, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மனுவை வாபஸ் பெற  அனுமதி கோரினார். அதற்சுகு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியத.

மனுதாரர் சாபு ஸ்டீபன் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் வி.கே.பிஜுவிடம், “யாராவது ராகுல் காந்தியாக பிறந்தால் அல்லது லாலு பிரசாத் யாதவாக பிறந்தால், அவர்களை தேர்தலில் போட்டியிடவிடாமல் தடுப்பது எப்படி? என கேள்வி எழுப்பியதுடன், அத முடியாது இல்லையா?  அது அவர்களின் உரிமைகளை பாதிக்காதா என கேள்வி எழுப்பியதுடன்,  யாராவது பெற்றோர் இதே போன்ற பெயரைக் கொடுத்திருந்தால், அது அவர்களின் தேர்தலில் போட்டியிடும் உரிமைக்கு இடையூறாக இருக்மே என்ற கேள்வி எழுப்பியதுடன்,  இது அவர்களின் உரிமைகளை பாதிக்காதா? ஒருவரின் பெற்றோர் தனது குழந்தைக்கு அரசியல் தலைவரின் பெயரை சூட்டினால், அது அவர்களின் தேர்தல் போட்டி போடும் உரிமைக்கு தடையாகவே இருக்கும் என்று கூறியது.

இதையடுத்து, “இந்த வழக்கின் கதி என்னவாகும் என்பது உங்களுக்கு தெரியும் என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள் வழக்கறிஞரிடம் மனுவை வாபஸ் பெறுமாறு அறிவுறுத்தினர்.

தமிழ்நாட்டில் நடைபெற்ற முடிந்த மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வதுக்கு எதிராக, அதே பெயரில் மேலும் 5 பேர் போட்டியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.